Man in Bihar Donates His Entire Land to Two Elephants : பாட்னாவிற்கு அருகில் இருக்கும் ஜனிப்பூர் புல்வாரி ஷரிஃப் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான முகமது அக்தர். அவரிடம் மோட்டி மற்றும் ராணி என 15 வயது மற்றும் 20 வயது யானைகள் இரண்டு வ் வாழ்ந்து வருகிறது. இவர் ஆசியன் எலிஃபேண்ட் ரிஹாப்லிடேசன் அண்ட் வைல்ட்லைஃப் அனிமல் ட்ரஸ்ட் (Asian Elephant Rehabilitation and Wildlife Animal Trust (AERAWAT)) என்ற என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வருகிறார்.
Advertisment
இவர் தனக்கு சொந்தமான 6.25 ஏக்கர் நிலத்தை இந்த இரண்டு யானைகளுக்காக கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது நான் இல்லாத நாட்களில் இவ்விரண்டு யானைகளும் உணவின்றி பசியால் வெளியே வாடக்கூடாது என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.
மோட்டி ஒரு முறை தன்னுடைய வாழ்க்கையையே காப்பாறியது என்று கூறும் அவர், போஜ்பூர் பகுதியின் ஷாஹ்பூர் பகுதிக்கு மோட்டி தன் பாகனுடன் சென்றுள்ளது. பாகன் எங்கேயோ கீழே விழுந்து அடிபட, அவரை காப்பதற்காக நானும் உடனே அங்கே சென்றேன். இரவில் அங்கே தங்கியிருக்கும் போது மோட்டி என்னை எழுப்பியது. என்ன என்று பார்த்த போது அங்கே ஒரு மனிதன் கையில் துப்பாக்கியை வைத்து அக்தரை சுட காத்திருந்து தெரிய வந்துள்ளது. அன்று தன்னுடைய உயிரை காப்பறியதற்காக நன்றிகடனான இந்த யானைகளுக்கு இந்த இடத்தினை வழங்கியுள்ளார்.
ஆனால் இந்த யானைகளை விற்பதற்காக, இவர்களின் குடும்ப உறுப்பினர்களே இவருக்கு பின்னால் சதி செய்து வருகிறது என்று உணர்ந்த அவர் வனத்துறை வார்டன் மற்றும் பாட்னா காவல்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தன்னுடைய குடும்ப உறவுகளாலே தனக்கு ஆபத்து என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
கேரளாவில், காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட, பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாச்சி பழங்களை தின்ற கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்த சோகமான செய்திகளுக்கு மத்தியில் தற்போது ஆறுதல் தரும் ஒன்றாக இருக்கிறது அக்தரின் இந்த செயல்.