Advertisment

கோப்ரா கடிச்சிட்டு… வெளிவந்த ரூ.37 கோடி காப்பீடு தொகை மரண நாடகம்

வாக்மெளரேவின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் இறக்கவில்லை என்றும், மருத்துவமனைக்கு பிரவின் என்ற பெயரில் வந்தவர் தான் வாக்மெளரே என்பதும் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
கோப்ரா கடிச்சிட்டு… வெளிவந்த ரூ.37 கோடி காப்பீடு தொகை மரண நாடகம்

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான முதியவர், 37 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையைப் பெறுவதற்காக, ஆதரவற்ற நபரை பாம்பைப் பயன்படுத்திக் கொன்று, தான் இறந்துவிட்டது போல் நாடகமாடிய சம்வவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment

பாம்பு கடித்து இறந்தது குறித்து விசாரிக்க காப்பீடு நிறுவனத்தின் ஊழியர்கள் வந்ததன் பேரிலே, இச்சம்பவம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, முதியவர் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கிடைத்த தகவலின்படி, பிரபாகர் பீமாஜி வாக்சௌரே கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்தியா திரும்பிய அவர், அகமதுநகரில் உள்ள ராஜூர் கிராமத்தில் இருந்துள்ளார்

இந்நிலையில், வாக்செளரே இறந்துவிட்டதாக, அரசு மருத்துவமனையிலிருந்து ராஜூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் காவல் துறையினர் சென்றனர். அப்போது, அங்கு வந்த அவரது உறவினர் பிரவீனும், அப்பகுதியை சேர்ந்த ஹர்சத் என்பவரும், இது வாக்செளரே தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், உடற்கூராய்வில் பாம்பு கடி காரணமாக தான் வாக்செளரே உயிரிழந்ததாக ரிப்போட் வந்ததால், இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் பிரவீனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாக்செளரே இறப்பு குறித்து, அவர் காப்பீடு திட்டம் எடுத்திருந்த அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, நிறுவனத்தின் ஊழியர் விசாரிப்பதற்காக அகமதுநகர் வந்துள்ளார். அப்போது, காவல் துறையினரிடம் இறப்பு குறித்து கூடுதல் தகவல்கள் தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வாக்செளரே வசித்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவமே தெரியவில்லை. ஆனால், அன்றைய தினம் ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்த்தாக தெரிவித்துள்ளனர். மேலும், உடலை உறுதிசெய்ய மருத்துவமனை வந்த ஹர்சத்தை காவல் துறையினர் தொடர்பு கொண்ட போது, அவர் வாக்மெளரே கொரோனாவால் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் குழப்பமடைந்த காவல் துறையினர், வாக்மெளரேவின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் இறக்கவில்லை என்றும், மருத்துவமனைக்கு பிரவின் என்ற பெயரில் வந்தவர் தான் வாக்மெளரே என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, களத்தில் இறங்கிய காவல் துறையினர், உடனடியாக நாடகம் ஆடிய கும்பலை கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய அகமதாபாத் எஸ்பி மனோஜ் படீல், " ஏற்கனவே 2017இல் மனைவி இறந்துவிட்டதாகக் காப்பீடு நிறுவனத்தில் பணம் கோரி வாக்மெளரே மோசடியில் ஈடுபட்டிருந்ததால்,அவரது மரண வழக்கை நிறுவனத்தின் ஊழியர்கள் தீவிரமாக ஆராய்ந்தனர். வாக்மெளரே தனது கூட்டாளிகளுடன் இணைந்து காப்பீடு தொகை 5 மில்லியன்(இந்திய மதிப்பில் 37. 5 கோடி) பெறுவதற்காகச் சொந்த மரண நாடகத்தை நிகழ்த்தியுள்ளார்.

அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் அனப் என்பவரை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, பாம்பு பிடிப்பவரை வரவைத்து, அவரிடமிருந்த கோப்ரா பாம்பு மூலம் அனப்பை கடிக்க வைத்து கொன்றுள்ளனர். அடுத்து, அந்த சடலத்தை வாக்மெளரே வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின், ஆம்புலன்ஸ் வரவழைத்து, பாம்பு கடித்துவிட்டதாக பிரவின் போல் நாடகத்தை நிகழ்த்தியுள்ளனர்.

அவரின் கூட்டாளிகளுக்கு தலா 35 லட்சம் ரூபாய் தருவதாக வாக்மெளரே உறுதியளித்துள்ளார். தற்போது வாக்மெளரே மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. பாம்பை கொண்டு வந்த நபரை, தேடி வருகிறோம்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cobra Life Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment