கால்நடை மருத்துவர்களை அச்சுறுத்தும் பேச்சு; வெளியான ஆடியோ கிளிப்; நெருக்கடியில் மேனகா காந்தி

Maneka Gandhi under fire for ‘abusive, threatening calls’ to vets; கால்நடை மருத்துவர்களை மிரட்டும் வகையில் பேசிய மேனகா காந்தி; வெளியான ஆடியோ கிளிப்; கால்நடை மருத்துவ சங்கம் கண்டனம்

பாஜக எம்.பி. மேனகா காந்தி, மூன்று கால்நடை மருத்துவர்களிடம் தவறான மற்றும் அச்சுறுத்தும் வகையில் பேசிய தொலைபேசி ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவருக்கு இந்திய கால்நடை மருத்துவ சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

IVA இன் எதிர்ப்பு அழைப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒரு “கருப்பு தினத்தை” அனுசரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு “பாராளுமன்ற நடத்தை” குறித்து ஐ.வி.ஏ கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஐ.வி.ஏ அமைப்பு, முன்னாள் மத்திய அமைச்சரான மேனகாவிடமிருந்து “நிபந்தனையற்ற மன்னிப்பு” கோரியுள்ளது.

கோரக்பூரில் கால்நடை மருத்துவரான டாக்டர் விகாஸ் ஷர்மாவுடனான தனது தொலைபேசி உரையாடலின் ஒரு ஆடியோ கிளிப்பில் மேனகா காந்தி, நாய் மீது ஒரு மோசமான ஊனமுற்ற செயலைச் செய்ததாக மருத்துவர் மீது குற்றம் சாட்டுகிறார். இந்த உரையாடல் ஜூன் 17 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

நாய் இறந்தால் ஷர்மாவின் உரிமத்தை “பறிப்பேன்” என்று மேனகா காந்தி அச்சுறுத்துகிறார். “நான் உங்கள் உரிமத்தை பறிப்பேன் … ஆபரேஷனை மேற்கொள்ள உங்களுக்கு தகுதி இருக்கிறதா,” என்று கூறி, பின்னர் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்கிறார்.

மேனகா, மருத்துவரின் குடும்பப்பெயரைக் கேட்கிறார், பின்னர் மருத்துவரை நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு “கறை ” என்று கூறுகிறார். உங்கள் தந்தை என்ன செய்கிறார், அவர் ஒரு தோட்டக்காரரா அல்லது வாட்ச்மேனா? நீங்கள் கல்வியறிவு பெற்றவரா? ”என்று மேனகா கேட்கிறார். அதற்கு ஷர்மா, தனது தந்தை ஒரு ஆசிரியர் என்று பதிலளித்தார்.

மேனகா காந்தியுடன் தொலைபேசியில் பேசியதாக அடையாளம் காணப்பட்ட மற்றொரு கால்நடை மருத்துவருனான டாக்டர் மகேந்திரா உடனான மேனகாவின் தொலைபேசி உரையாடலின் ஆடியோ கிளிப்பில், ஒரு நாயை “கொன்றதற்காக” மகேந்திராவின் உரிமத்தை ரத்து செய்வதாக மேனகா அச்சுறுத்தியுள்ளார். ஆனால் கால்நடை மருத்துவர், அந்த நாயின் உரிமையாளர் விரும்பியபடி நாயை “கருணைக்கொலை செய்ததாக” கூறுகிறார்.

ஆக்ராவில் உள்ள கால்நடை மருத்துவரான டாக்டர் எல்.என். குப்தாவுக்கும் மேனகா காந்திக்கும் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடலின் தனி ஆடியோ கிளிப்பில், எம்.பி. மேனகா மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்வதாகவும், மருத்துவரின் கிளினிக்கை மூடிவிடுவதாகவும், ஒரு நாயை ஊனமுற செய்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்துகிறார். நாய் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ .70,000 கொடுக்குமாறு மேனகா மருத்துவரிடம் கூறுகிறார்.

இது குறித்து விவரங்கள் அறிய மேனகா காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு மேனகா காந்தி பதிலளிக்கவில்லை. மேலும் மருத்துவர்கள் ஷர்மா மற்றும் குப்தா இருவரிடமும் கருத்துக்களை பெற முடியவில்லை. அதேபோல், மகேந்திரா என அடையாளம் காணப்பட்ட கால்நடை மருத்துவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆடியோ கிளிப்களில் ஒன்றில் காந்தியால் பெயரிடப்பட்ட டாக்டர் ரத்னேஷ் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “மேனகா காந்தியிடமிருந்து ஷர்மாவுக்கு இந்த அழைப்பு சிறிது நேரத்திற்கு முன்பு வந்தது. நாங்கள் கோரக்பூரில் ஒரு விலங்குகள் தங்குமிடம் நடத்தி வந்தோம், ஆனால் நாங்கள் மாறிவிட்டோம். ” என்றும் இனி ஷர்மாவுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றும் ரத்னேஷ் கூறினார்.

செவ்வாயன்று தனது அறிக்கையில், ஐ.வி.ஏ மேனகா காந்தியின், உயர்மட்ட மோசமான செயல் மற்றும் இழிவான மொழி ஆகியவற்றை கண்டனம் செய்தது. மேலும் நாட்டின் அனைத்து சட்டங்களின் படியும் காழ்ப்புணர்ச்சியான இந்த செயலுக்கு இழப்பீடு கோருகிறது.

“டாக்டர் ஷர்மாவிடம் கொண்டுச் செல்லப்பட்ட நாய்க்கு ஒரு சிதைந்த கால் இருந்தது, அதன்படி அவர் நாயை ஊனமுற செய்வதை அறிவுறுத்தினார். நாய் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு 2-3 நாட்கள் கிளினிக்கில் வைக்கப்பட்டு பின்னர் உரிமையாளரிடம் திரும்பியது. உரிமையாளர் நாயுடன் திரும்பி வந்தபோது, ​​தையல்கள் செயலிழந்துவிட்டன, ”என்று IVA பொதுச் செயலாளர் டாக்டர் டி தணிகைவேலு கூறினார்.

“மேனகா தனது தொலைபேசி அழைப்பில் மருத்துவரை மிகவும் துன்புறுத்தினார் மற்றும் மோசமான மொழியையும் பயன்படுத்தினார். ஆக்ராவில் உள்ள மருத்துவர் விஷயத்தில், வழக்கின் விவரங்கள் கூட தெரியாமல் ரூ .70,000 இழப்பீடாக கோரினார். இதுபோன்று நடப்பது முதல் முறை அல்ல. அவர் இப்போது பல ஆண்டுகளாக இதுபோன்ற அழைப்புகளை செய்து வருகிறார், ஆனால் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், ”என்றும் தணிகைவேலு கூறினார்.

“ஆனால் இப்போது பொறுமையாக இருந்தது போதும் என்று நாங்கள் உணர்ந்தோம். அவர் முழுத் தொழிலுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும், ஏனெனில், அவர் கால்நடை மருத்துவர்களை கல்வியறிவற்றவர்கள் என்று அழைத்துள்ளார் மற்றும் தொழிலை துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஒருவேளை அவர் கால்நடை கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தால், அவர் அத்தகைய கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும், ’’ என்றும் தணிகைவேலு கூறினார்.

“தொழில்முறை முறைகேடு தொடர்பான பிரச்சினை இருந்தால், அத்தகைய வழக்குகளை கையாள ஒரு சட்டம் உள்ளது. புகார்கள் அளிக்கக்கூடிய ஒரு சட்டமன்ற அமைப்பு உள்ளது. ஆனால் கால்நடை மருத்துவர்களை தொலைப்பேசியில் அழைப்பதும் அவர்களுடன் இப்படி மோசமான முறையில் பேசுவதும் வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாதது ”என்று IVA மற்றும் இந்திய கால்நடை கவுன்சிலின் தலைவர் டாக்டர் உமேஷ் சந்திர சர்மா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maneka gandhi under fire for abusive threatening calls to vets

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com