கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஆட்டோரிக்ஷாவில் பிரஷர் குக்கர் வெடித்துச் சிதறியதில் பயங்கரவாதி ஒருவர் காயமுற்றார்.
இது, தரவு திருட்டு ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக மேற்கொண்ட முயற்சி என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் வியாழக்கிழமை (டிச.15) ஒரு ஊடக உரையாடலில், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தால் (IED) குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு, நவம்பர் 19 அன்று மாநில காவல்துறையால் முன்கூட்டியே பயங்கரவாத செயல் என்று கூறப்பட்டது.
இது பாஜகவின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று குற்றம் சாட்டினார். மேலும், இது, தரவு திருட்டு ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக மேற்கொண்ட முயற்சி என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
தொடர்ந்து குக்கர் குண்டுவெடிப்பு, வாக்குச் சீட்டு விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள்” என்றார்.
முன்னதாக, நவம்பர் 19ஆம் தேதியன்று, மங்களூரு நகரில் உள்ள ஆட்டோரிக்ஷாவில், இரண்டு வெவ்வேறு சட்ட விரோத செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக், 23, என்ற சந்தேக நபர் பயணித்தார்.
அப்போது அவர் வைத்திருந்த ஒரு பையில் பிரஷர் குக்கர் ஐஇடியை தற்செயலாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்தக் குண்டுவெடிப்பில் பயங்கரவாதிக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில், குண்டுவெடிப்புக்குப் பிறகு, கர்நாடக காவல்துறைத் தலைவர் பிரவீன் சூட், ஆட்டோரிக்ஷாவில் தற்செயலான குண்டுவெடிப்பு சம்பவத்தை சமூக ஊடகங்களில் "பயங்கரவாதச் செயல்" என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய டி.கே. சிவக்குமார், “இது மும்பை, டெல்லி அல்லது காஷ்மீர் போன்ற பயங்கரவாதச் செயலா? குண்டுவெடிப்பை பெரிதுப்படுத்தி காட்டி வாக்குகளைப் பெற பாஜக விரும்புகிறது. வாக்காளர்களுக்குக் காட்ட பாஜகவிடம் பெரிய சாதனைகள் எதுவும் இல்லை” என்றார்.
இதற்கிடையில், 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி எடுத்த தேச விரோத நிலைப்பாட்டிற்கு அவரது கருத்துகள் சான்றாகும் என்று காங்கிரஸ் தலைவரை பாஜக கடுமையாக சாடியது.
இது குறித்து பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் வெள்ளிக்கிழமை (டிச.16) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பாஜக மீதான பயத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பயங்கரவாதிகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், சிவக்குமாரின் அறிக்கைக்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, குண்டுவெடிப்பு ஒரு மறைப்பு அல்லது கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
மேலும், “இது, சிறுபான்மையினரின் வாக்குகளை மனதில் வைத்து, பயங்கரவாதத்தை ஆதரிப்பதும், பயங்கரவாத சம்பவங்களில் மென்மையாக நடந்து கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்காக” என விமர்சித்துள்ளார்.
குக்கர் வெடிகுண்டு விவகாரம் மிகத் தெளிவாக உள்ளது; ஒரு நபர் குக்கரில் வெடிகுண்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து வெடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பலமுறை தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டுள்ளார். மேலும் அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர் தீவிரவாத தொடர்புகளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு நாட்டிற்கு வெளியேயும் தொடர்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “முதலாவதாக, வாக்காளர் தரவு திருட்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியால் பிபிஎம்பியுடன் இணைந்து பணியாற்ற முதலில் அனுமதி வழங்கப்பட்ட ஒரு அமைப்பு சம்பந்தப்பட்டது.
இரண்டாவதாக, சட்டவிரோத வாக்குகளை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிதான் ஈடுபடுகிறது. முறைகேடுகள் நடந்த அனைத்து தொகுதிகளும் நன்கு தெரியும். படங்களைப் பார்த்து இரட்டை வாக்குகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பம் இப்போது இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil