Mani Shankar Aiyar on CAA: ஆசாதி ஆசாதி என்று முழக்கம் பின்னால் கேட்டுக் கொண்டிருக்க, ஜந்தர் மந்தரில் மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் ”என்னுடைய எதிர்காலம் என்ன ஆகியப்போகிறது என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் பாகிஸ்தானில் பிறந்தேன். வாழிடம் தேடித்தான் இந்தியாவுக்கு வந்தேன். என்னிடம் ஆதாரம் கேட்டால் நான் எதை காட்டுவது? மேலும் நான் ஏன் என்னுடைய அடையாளத்தை காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Watch: Congress leader Mani Shankar Aiyar present at Jantar Mantar during the #CAAProtest asks what proof of identity will he show as he was born in Pakistan.
For more on the #CAAProtests
follow LIVE here: https://t.co/HkAcwhDfzG pic.twitter.com/uTcXmVG2IM
— The Indian Express (@IndianExpress) December 19, 2019
இந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனையை தருகிறது. இதனை மாணவர்கள் நன்கு அறிந்ததால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் குரல் நாடாளுமன்றத்திலும் தேர்தல் காலங்களிலும் நிச்சயம் உரக்க ஒலிக்கும் என்று அவர் கூறினார். மேலும் இந்த போராட்டத்தை வரலாற்று நிகழ்வு என்றும் அவர் கூறினார். அப்போது நான் என்னுடைய பேரனிடம் “மோடி அமித்ஷாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுக்கு சிக்னல் காட்டிய ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்” என மகிழ்ச்சியாக கூறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடது சாரி தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோத்பால் பாசு, பிருந்தா காரத், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜய் மக்கன், சந்தீப் தீக்சித், சமூக செயற்பாட்டாளர்கள் யோகேந்திர யாதவ், உமர் காலித் ஆகியோர் செங்கோட்டை மற்றும் மண்டி ஹவுஸ் அருகே கைது செய்யப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெருந்திரளாக போராடியதால் தலைநகரின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூர்கான் மற்றும் டெல்லியை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வேயில் 10 கி.மீ வரை ட்ராஃபிக் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.