/indian-express-tamil/media/media_files/2025/02/09/HEZoLtjrHqsuDpe538Uv.jpg)
புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (File)
அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்த பிறகு மணிப்பூர் முதல்வர் பதவியை பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறைக்கு மத்தியில், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After 2-hour meeting with Shah and Nadda, Biren Singh, who defied calls for his resignation for 21 months, steps down
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூர் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட சந்திப்பை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடருமாறு பிரேன் சிங்கிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2023 முதல் மேதி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையேயான இன வன்முறைக்கு மத்தியில் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பிரேன் சிங் ஜூலை 2023-ல் தனது ராஜினாமாவை சமர்ப்பித்திருந்தார். இருப்பினும், அவரது ஆதரவாளர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் அதைத் திரும்பப் பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.