’பதற்ற சூழலில் தேவையற்ற கருத்து’; ப.சிதம்பரம் பதிவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் எதிர்ப்பு

குக்கி-சோ குழுக்களின் தனி சுயாட்சி கோரிக்கையை ஆமோதிக்கும் வகையில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்; மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி கடிதம்

குக்கி-சோ குழுக்களின் தனி சுயாட்சி கோரிக்கையை ஆமோதிக்கும் வகையில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்; மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி கடிதம்

author-image
WebDesk
New Update
chidambaram kharge

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. (கோப்பு புகைப்படம்)

Sukrita Baruah

மாநிலத்திற்குள் உள்ள மணிப்பூரின் வெவ்வேறு இன சமூகங்களுக்கு பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் சமூக ஊடகப் பதிவை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Highly inappropriate during this hour’: Manipur Congress leaders write to Kharge about Chidambaram’s Twitter post

எக்ஸ் பக்கத்தில் இப்போது நீக்கப்பட்ட இடுகையில், மேலும் 5000 பாதுகாப்பு படை (CAPF) பணியாளர்களை அனுப்புவது "சரியான பதில் நடவடிக்கை இல்லை" என்று சிதம்பரம் கூறியிருந்தார். ”அதற்கு பதிலாக மிகவும் புத்திசாலித்தனமானது, நெருக்கடிக்கு முதல்வர் பிரேன் சிங் தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு அவரை உடனடியாக நீக்குவது. இது இன்னும் புரிந்துகொள்ளத்தக்கது: மெய்தி, குக்கி-சோ மற்றும் நாகா ஆகியவை உண்மையான பிராந்திய சுயாட்சியைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரே மாநிலத்தில் ஒன்றாக வாழ முடியும். மாண்புமிகு பிரதமர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, மணிப்பூருக்குச் சென்று, மணிப்பூர் மக்களிடம் பணிவுடன் பேசவும், அவர்களின் குறைகளையும் அபிலாஷைகளையும் நேரடியாகக் கற்றுக்கொள்வதும் சிறந்த அரசியல் தலைவனின் திறன் ஆகும்,” என்றும் ப.சிதம்பரம் பதிவிட்டு இருந்தார்.

மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 10 மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், குக்கி-சோ குழுக்களின் தனி சுயாட்சி கோரிக்கையை ஆமோதிக்கும் வகையில் ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்..

Advertisment
Advertisements

இது குறித்து ஆலோசிக்க கூட்டத்தை கூட்டியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“கூட்டத்தில், மணிப்பூர் நெருக்கடி தொடர்பாக ப.சிதம்பரத்தின் சமீபத்திய எக்ஸ் பதிவின் கருத்துக்களை நாங்கள் ஒருமனதாகக் கண்டித்தோம். மணிப்பூரில் பதற்றம், சமூக நெருக்கடி மற்றும் பொது உணர்திறன் போன்ற இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமற்ற கருத்துக்கள் மற்றும் உணர்வுகள் பதிவில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக எப்போதும் நிற்கிறது. ப.சிதம்பரத்தின் இன்றைய பதிவுக்கு எதிராக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அதை உடனடியாக நீக்க அவருக்கு உத்தரவிடுமாறும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொள்கிறோம்,” என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் தனது பதிவை நீக்குவதற்கு முன், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா அதன் கீழ் கருத்து தெரிவித்திருந்தார்: “தயவுசெய்து அதை நீக்கவும். மணிப்பூர் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. இது மிகவும் உணர்திறன் கொண்டது,” என்று மேகச்சந்திரா பதிவிட்டு இருந்தார்.

செவ்வாயன்று, காங்கிரஸ் தலைவரும் மணிப்பூர் முன்னாள் முதல்வருமான ஒக்ரம் இபோபு சிங்கும் சிதம்பரத்தின் கருத்துக்கும் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி, இவை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

“இது முற்றிலும் அவருடைய சொந்தக் கருத்து, அவருடைய ட்வீட்டைப் பார்த்த உடனேயே… நாங்கள் மல்லிகார்ஜுன் கார்கே ஜியிடம் தெரிவித்தோம், அவர் உடனடியாக அனைத்து மூத்த தலைவர்களையும் அழைத்தார். இது அவரது (சிதம்பரத்தின்) தனிப்பட்ட பார்வையாக இருக்கலாம், ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நிறைய தவறான புரிதல்கள் இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் கார்கே ஜியிடம் பேசினேன்... உடனே கார்கே ஜி அவரிடம் பேசினார்... உடனடியாக அவர் அதை நீக்கிவிட்டார்... நாங்கள் உரிய நடவடிக்கைக்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம், மணிப்பூர் தொடர்பாக இதுபோன்ற அறிக்கையை உருவாக்க வேண்டாம் என்று அவரிடம் பேசுவேன்,” என்று அவர் கூறினார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கும் சிதம்பரத்தை சாடினார், 2008 ஆம் ஆண்டில் ஜோமி புரட்சிகர இராணுவத்துடன் இடைநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மோதலுக்கு வித்திடப்பட்டது சிதம்பரத்தால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur P Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: