மணிப்பூர் மாநிலம், ஜிரிபம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், குகி-சோ தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 2 மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: 1 CRPF personnel killed, 2 policemen injured during exchange of fire with militants in Manipur’s Jiribam district
ஜிரிபம் காவல் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மோங்பங்கில் காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநிலப் படைகளின் கூட்டுக் குழு ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த குழு மீண்டும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் பீகாரைச் சேர்ந்த அஜய் குமார் ஜா (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அசாமின் கச்சார் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜிரிபம், மணிப்பூரில் 15 மாத கால இன மோதலின் சமீபத்திய முக்கிய பகுதி ஆகும். ஜூன் முதல் வாரத்தில் இன மோதல் மாவட்டத்தை அடைந்ததையடுத்து, குகி-சோ மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“