Advertisment

காடுகள் அழிப்புக்கும் கோவிட்-19க்கும் தொடர்பு; பசுமையை மீட்க மணிப்பூர் ஐகோர்ட் வழிக்காட்டல்

கோவிட்-19 உள்ளிட்ட நோய்களை காடுகளின் அழிவு மற்றும் வன உயிரினங்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திய மணிப்பூர் உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்காக நாட்டின் இழந்த காடுகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur High Court, Manipur High court links COVID-19 to destruction of forests, Manipur HC insists restoration of lost greenery, coronavirus, மணிப்பூர் உயர் நீதிமன்றம், காடுகள் அழிப்பு, கோவிட்-19, பசுமையை மீட்டெடுத்தல், covid-19, latest coronavirus news, latest coronavirus news

கோவிட்-19 உள்ளிட்ட நோய்களை காடுகளின் அழிவு மற்றும் வன உயிரினங்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திய மணிப்பூர் உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்காக நாட்டின் இழந்த காடுகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது.

Advertisment

மணிப்பூர் பள்ளத்தாக்கு கிராம காப்புகாடு வன உரிமைகள் பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த பொது நல வழக்கு மனிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மற்றும் நீதிபதி ஏ பிமோல் சிங் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனித இனத்தை அழிக்க தொற்றுநோய் பல கண்டங்களில் முடிந்தவரை காட்டை அப்படியே வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஒவ்வொரு வனத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் அடிப்படையில் ஒரு பாதுகாப்பு கோடு வரையப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையியல் அறிஞர் சார்லஸ் டார்வின், நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் சர் பீட்டர் மெடாவர், மூத்த பத்திரிகையாளர் ஜிம் ராபின்ஸ், தொற்று நோய் குறித்து ஆய்வு செய்த வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் பெர்க்ஸ்ட்ரோம் ஆகியோர் எழுதிய பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை மணிப்பூர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“இன்னும் பல விலங்குகளுக்கு வைரஸ்கள் வரவில்லை. அவை உலகளாவிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும். நாம் காடுகளை பாதுகாத்து வெற்று நிலங்களை மறுகட்டமைத்தல் மற்றும் மனிதர்களையும் வனவிலங்குகளையும் பிரிக்கும் இடையக மண்டலங்களை வழங்குவது இன்றியமையாதது. இதுபோன்ற அழிவு நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்” என்று பேராசிரியர் பெர்க்ஸ்ட்ரோம் கட்டுரையிலிருந்து நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

காடுகளை அழிப்பதற்கும் தொற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா என்று இதற்கு முன்பு கேள்வி எழுப்பப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

"ஒரு வைரஸ் என்பது புரதத்தில் மூடப்பட்ட ஒரு கெட்ட செய்தி" என்று நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் சர் பீட்டர் மேடவர் கூறினார். எளிமையான தோற்றமுடைய புரதம்-பூசப்பட்ட ஆர்.என்.ஏ உலகை துண்டு துண்டாக ஆக்குகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காடழிப்பை நிறுத்த ஒரு தெளிவான அழைப்பு வந்துள்ள நிலையில், இழந்த காடுகளை மீட்டெடுப்பதற்கான தேவை இப்போது கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

“காடுகளை மீட்டெடுத்தல் என்பது காடுகள் எங்கு அழிக்கப்பட்டாலும், இயற்கையின் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கு சூழலியலை மீட்டமைக்கப்படுவதை உறுதி செய்யும்” என்று நீதிமன்றம் கூறியது.

கோவிட்-19ஐ தடுக்க நாடுகள் பொதுமுடக்கம் போன்ற பல்வேறு முறைகளை சோதித்துப் பார்க்கின்றன. அது பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ பரிசோதனைகளை மேம்படுத்துதல், முகமூடிகளை அணிந்துகொள்வது மற்றும்தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முறைகளை பின்பற்றி வருகின்றனர்.

“இந்த முறைகள் அனைத்தையும் பின்பற்றிய போதிலும், எளிய புரதம் பூசப்பட்ட ஆர்.என்.ஏ கோவிட்-19 இன்னும் வேகமாக பரவி வருகிறது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகள் அனைத்தும் இன்னும் விஞ்ஞான ரீதியாக நம்பத்தகுந்ததாகத் தோன்றுகின்றன. வைரஸைக் கட்டுப்படுத்துவது ஒரு தீர்க்கமுடியாத பணியாகத் தோன்றுகிறது… முழு மனிதகுலமும் புரோட்டகோரஸ் முரண்பாட்டில் சிக்கியுள்ளது மற்றும் அனைத்து முழக்கங்களும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியவில்லை. எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு தேவை. இந்த தொற்றுநோய்க்கும் நமக்கு ஒரு தீர்வு தேவை” என்று நீதிமன்றம் கூறியது.

காடுகள் அழிப்பால் சுற்றுச்சூழலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஏகாதிபத்திய ஆட்சியின் போது, ​​உலகின் மிகச் சிறந்த பாதுகாக்கப்பட்ட பல அடுக்கு பல்லுயிர் பெருக்கங்களில் ஒன்றான ‘ஷோலா காடுகளில்’ மில்லியன் கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக அங்கே கவர்ச்சியான யூகலிப்டஸ் மற்றும் வாட்டல் மரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பெரிய மலைப்பகுதிகளில் நடப்பட்டன. அதன் விளைவாக கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் அந்த பிராந்தியத்தில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இயற்கையின் சுழற்சியில் மனிதர்கள் தங்கள் பங்கை மறுவரையறை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

“அனைத்து உயிரினங்களிடமும் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று நம்புவது ஒரு தவறான கருத்தாகத் தோன்றுகிறது. மனித இனம் ஒரு மேலாதிக்க இனமாக இருந்தாலும், ஒரு இனம் தங்கள் சொந்த வாழ்க்கைச் சுழற்சியில் மற்றொன்றுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால் ஆதிக்கம் செலுத்த முடியாது. இது வரம்பிற்குள் இணைந்திருக்க வேண்டும். இதன் மூலம் இயற்கையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். கண்மூடித்தனமான மக்களின் காடழிப்பு மற்றும் தேவையற்ற விலங்குகளின் மனித தொடர்பு ஆகியவை தற்போதைய தொற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றன. அது இல்லையென்றாலும் தவிர்க்கப்படலாம்” என்று நீதிமன்றம் கூறியது.

காடுகள் அழிப்பின் தாக்கம் மற்றும் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுப்பதன் அவசியம் மணிப்பூருக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்கும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பிரச்சினை என்று நீதிமன்றம் கூறியது.

ஜூனோடிக் வைரஸ் பரவலைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வழக்கமான ஸ்கிரீனிங்கையும் நீதிமன்றம் வலியுறுத்தியது. தொற்று நோய்கள் குறித்த தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு முறையாக நிதியுதவி அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Corona Virus Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment