Advertisment

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உள்துறை தெரிவிப்பு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் போராட்டக்காரர்கள் எதிர்ப்பால் தொடர்பு கொள்ள முடியவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் சமர்பிப்பு

author-image
WebDesk
New Update
Manipur protest

ஜூலை 28, 2023 அன்று புது தில்லியில், மலை மாவட்டங்களில் வசிக்கும் மணிப்பூரின் பழங்குடியின மக்களுக்கு தனி நிர்வாகம் கோரி, ஜந்தர் மந்தரில் குகி-ஜோ மகளிர் மன்றத்தின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். (PTI)

Sukrita Baruah

Advertisment

மே 4 அன்று மணிப்பூரில் மூன்று பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது போன்ற சம்பவங்கள் "மீண்டும் நிகழாமல் தடுக்க", இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் மணிப்பூர் காவல்துறை இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, அவர் விசாரணைகளை நேரடியாக மேற்பார்வையிடுவார் என்று கடந்த வார இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 20 அன்று, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், ஜூலை 19 அன்று வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவத்தின் காட்சிகளால் "ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்" என்று கூறியது. குற்றவாளிகளை கைது செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதையும் படியுங்கள்: மணிப்பூரில் நடந்ததை மற்ற இடத்திலும் நடக்கிறது என கூறி நியாயப்படுத்த முடியாது: தலைமை நீதிபதி சந்திரசூட்

ஜூலை 28 அன்று, இந்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் "தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று கூறப்பட்டது. விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றும் முடிவை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, மணிப்பூருக்கு வெளியே உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரமாணப் பத்திரம் மீண்டும் வலியுறுத்தியது.

ஒரு மாநிலத்திற்கு வெளியே வழக்கை மாற்றும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளதால், தனது பிரமாணப் பத்திரத்தில், சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தை கோரியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மனநல மருத்துவர்கள் மற்றும் ஒரு உளவியலாளர் அடங்கிய அனைத்து மகளிர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. எவ்வாறாயினும், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும் போது, ​​ அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுராந்த்பூருக்குச் சென்றுவிட்டதாலும், "சுராசந்த்பூரில் சிவில் சமூக அமைப்புகளின் எதிர்ப்பு" உள்ளதாலும், மாநில அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியவில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மாநில அரசு வகுத்துள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “ரகசியம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு, பாதிக்கப்பட்டவர்களின் விருப்பமான இடத்தில் பயிற்சி பெற்ற நிபுணரின் ஆலோசனை; கல்வியைத் தொடர விருப்பம் இருந்தால் கல்விக்கான ஏற்பாடு; ஒரு அர்த்தமுள்ள வாழ்வாதாரத்துடன் உதவி; பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது அடுத்த உறவினர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் பொருத்தமான வேலைக்கான போதுமான ஏற்பாடுகள்,” ஆகியவை அடங்கும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், காவல் நிலையப் பொறுப்பாளர்கள் “இதுபோன்ற அனைத்து வழக்குகளையும்” டி.ஜி.பி.,யிடம் புகாரளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விசாரணைகள் டி.ஜி.பி.,யின் நேரடி மேற்பார்வையின் கீழ் காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியால் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சகம் சமர்ப்பித்தது. இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிப்பதற்கும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குவதற்கும் "தகுந்த வெகுமதி" வழங்கப்படும் என்றும், இதற்கு மாநில அரசு தகவல் தெரிவிப்பவரின் ரகசியத்தை காப்பதோடு பாதுகாப்பையும் வழங்கும் என்றும் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​ஜூலை 19 அன்று வீடியோ வெளியானதில் இருந்து மணிப்பூர் போலீசார் ஏழு பேரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர் மே 18 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 19 வரை, விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment