மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறையில் 110க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
ஜூன் 19 தேதியிட்ட கடிதத்தில், "மத்தியத்திலும் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசாங்கத்தின் பிளவு மற்றும் ஆட்சி அரசியலால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
தொடர்ந்து, மணிப்பூர் முதலமைச்சரை "தற்போதைய இன வன்முறையின் சிற்பி" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் அவர் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மோதல்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த மாநிலத்துக்கு பயணம் செய்தும் அமைதி கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுமட்டுமின்றி, மத்திய அரசு அறிவித்த ரூ.101.75 கோடி நிவாரணப் பொதியால் ஏமாற்றம் அடைந்த கட்சிகள், மாநில அரசிடம் இருந்து தரவுகளை சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் யதார்த்தமான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பொதியைக் கோரியுள்ளன.
காங்கிரஸ் தவிர, ஜேடி(யு), சிபிஐ, சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“