Advertisment

தனி நிர்வாகம் கோரும் குக்கி, எதிர்க்கும் மெய்தி: போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு

மே வன்முறைக்கு முந்தைய பேச்சுக்கள் பழங்குடியினரின் சுயநிர்ணய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதில் கவனம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur

மணிப்பூரில், கவுகாத்தியில், புதன்கிழமை நடந்த இன வன்முறைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்திய மக்கள். (PTI)

மாநிலத்தில் நிலவும் நெருக்கடியைத் தணிக்கும் வகையில், மணிப்பூரைச் சேர்ந்த குக்கி குழுக்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.

Advertisment

வடகிழக்குக்கான மத்திய அரசின் முக்கிய புள்ளியும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கூடுதல் இயக்குநருமான அக்‌ஷய் மிஸ்ரா, அரசாங்கத்துடனான சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன் (SoO) ஒப்பந்தத்தின் கீழ், குகி போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் புலனாய்வு (IB) அதிகாரியுடனும், மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் (COCOMI) பிரதிநிதிகளுடன் ஒரு தனி சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

COCOMI என்பது மெய்தி மக்களின் சிவில் சமூக அமைப்பாகும்.

அரசாங்கம் SoO குழுக்களுடன் பேசக்கூடாது, ஏனெனில் அவர்கள் தான் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகளுக்கு பொறுப்பு என்று, COCOMI செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது

கடந்த பல மாதங்களாக SoO குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், மே மாதம் முதல் மாநிலம் கொந்தளிப்பில் தள்ளப்படுவதற்கு முன்பே, குக்கி அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டிருந்தாலும், மாநிலத்தில் வன்முறை தொடங்கிய பின்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

மே வன்முறைக்கு முந்தைய பேச்சுக்கள் பழங்குடியினரின் சுயநிர்ணய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதில் கவனம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன, தற்போதைய பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது.

அரசியல் பேச்சுவார்த்தை நடத்த இது சரியான நேரம் அல்ல. மாநிலத்தில் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், படிப்படியாகக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே இப்போது கவனம் செலுத்துகிறது. குழுக்களுடன் பல்வேறு வழிகளில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தனி நிர்வாகத்திற்கான குக்கி கோரிக்கை தற்போது விவாதிக்கப்படவில்லை, என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மெய்தி தரப்பில் தீர்வு காண, உள்துறை அமைச்சகம் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்குடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

சிங்கின் தலையீடு காரணமாக, பள்ளத்தாக்கின் விளிம்புப் பகுதிகளில் உள்ள        பதுங்கு குழிகளை அகற்றுவதற்கான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை, மெய்தி சமூகத்திடம் அதிக எதிர்ப்பை சந்திக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் குக்கி குழுக்கள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தன, அவர்கள் கொள்ளை கும்பல்களுக்கு எதிராக பாதுகாப்பற்றவர்களாக மாறுவார்கள் என்று கூறினாலும், COCOMI இந்த நடவடிக்கையை ஆதரித்தது.

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பழங்குடியின தலைவர்கள் மன்றத்தின் (ITLF) உறுப்பினர்கள் கண்டனப் பேரணியில் பங்கேற்றபோது. (PTI)

இந்தப் பேச்சுக்கள் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாக எல்லையோரப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகி வந்தாலும், வன்முறையின் அளவு சற்று குறைந்துள்ளது.

இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வைரல் வீடியோ மணிப்பூர் நெருக்கடியை தேசிய அளவிற்கு உயர்த்தியுள்ளது, என்று மணிப்பூர் பாதுகாப்பு ஸ்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசியல் முன்னணியில், எதிர்காலத்திற்கான எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய மணிப்பூர் அரசாங்கத்தின் மீதான அனைத்து நம்பிக்கையையும் இழந்து தனி நிர்வாகத்தில் குக்கிகள் பிடிவாதமாக இருக்கும் அதே வேளையில், முதல்வர் தற்போதைய நிலைக்காக வேரூன்றி உள்ளார்.

இந்த நேரத்தில், இந்த தீர்வுகள் எதுவும் செயல்படவில்லை. குக்கிகளுக்கு தனி நிர்வாகத்தை வழங்குவது தற்போதைய சூழ்நிலையில் மெய்திகளை கொந்தளிக்கச் செய்யும்.

குக்கிகள் முந்தைய நிலையை ஏற்க மாட்டார்கள். வன்முறை தணிந்த பின்னரே, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கேட்க முடியும், என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய அரசியல் தலைவர் கூறினார்.

குக்கி-ஜோமி கிளர்ச்சிக் குழுக்களுடன் அரசியல் தீர்வுக்கான சூத்திரம், இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரின் பழங்குடியினருக்கு 'பிராந்திய கவுன்சில்' வழங்குவது குறித்து சமாதானப் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டன.

குகி-ஜோமி மற்றும் நாகா பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் 10 மலை மாவட்டங்கள் - இரண்டு பிராந்திய கவுன்சில்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று குக்கி குழுக்கள் கேட்டுக் கொண்டன - ஒன்று நாகாக்களுக்கும் மற்றொன்று குகி-ஜோமி குழுக்களுக்கும்.

பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என பத்து பிரதேச சபைகள் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. மத்திய அரசு 2-2-1 என்ற பிரிவை முன்மொழிந்தது - இது ஜோமி கிளர்ச்சிக் குழுக்களால் ஆதரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இந்த முடிவை மெய்தி தரப்பு எதிர்க்கிறது, அதேநேரம் குக்கி முற்றிலும் தனி நிர்வாகத்தை கோருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment