மணிப்பூரில் வியாழன் வன்முறையைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஸ்தாபனம், இம்பால் பள்ளத்தாக்கின் விளிம்பு பகுதிகளில் படைகளை நிலைநிறுத்துவதற்கு மறுசீரமைப்பு செய்து வருகிறது.
Advertisment
ஒரு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு படைகளை நிலைநிறுத்துவதை விட தற்போது சில மாவட்டங்களின் பொறுப்பை ஒரே படைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்கு, மலைகளை சந்திக்கும் இடங்களில் வன்முறை அடிக்கடி நிகழும் நிலையில், மணிப்பூர் பாதுகாப்பு ஸ்தாபனம் இந்த பகுதிகளில் பஃபர் மண்டலங்களை (buffer zones) உருவாக்க முடிவு செய்தது, இதனால் பள்ளத்தாக்கு மக்கள் மலைகளை நோக்கி செல்வதையும், அங்கிருந்து வருவதையும் தடுக்க முடியும்.
எவ்வாறாயினும், இம்பால் மேற்கு-காங்போக்பி எல்லையில் வியாழக்கிழமை நடந்த சம்பவம் குறைந்தது இரண்டு பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. மேலும் கடந்த நாட்களில் நடந்த சில தீவைப்பு சம்பவங்கள் பாதுகாப்பு ஏற்பாட்டின் போதாமையை அம்பலப்படுத்தியுள்ளன.
Advertisment
Advertisements
இதற்கு காரணம் , பல்வேறு படைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது தான் என்பது பாதுகாப்பு ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
எனவே ஒருங்கிணைப்பு சிக்கலைத் தீர்க்க, மணிப்பூரில் இருக்கும் படையின் அளவைப் பொறுத்து ஒரு முழு மாவட்டத்தின் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பை ஒரு படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் தளவாட நிர்வாகத்தை எளிதாக்கும். பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்கள் BSFக்கு வழங்கப்பட்டால், அது மட்டுமே தவறுகளுக்குப் பொறுப்பாகும்.
அதே சமயம், முழுப் பகுதிக்கும் ஒரே கட்டளைக் கட்டமைப்பு இருப்பதால், படைகளை தரையிறக்கி நிர்வகிப்பது தளபதிகளுக்கு எளிதாக இருக்கும். இப்போது தனியாக ஒருங்கிணைப்பதில் நிறைய ஆற்றல் செல்கிறது, என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
இம்பால்: ஜூன் 29, 2023, வியாழன், இம்பாலில் ஏற்பட்ட புதிய வன்முறைகளுக்கு மத்தியில், வன்முறையாளர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் பாதுகாப்புப் பணியாளர்கள். (PTI)
தற்போது மணிப்பூரில் சுமார் 40,000 மத்திய படை வீரர்கள் உள்ளனர். இதில் அசாம் ரைபிள்ஸ், இந்திய ராணுவம், BSF, CRPF, SSB மற்றும் ITBP ஆகியவை அடங்கும். ஒரு மாவட்டத்தில் எந்த எல்லைப் பகுதியிலும், தற்போது, இந்த அனைத்துப் படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இராணுவம் மொய்ராங்கில் ஒரு விளிம்புப் பகுதியை நிர்வகித்துக்கொண்டிருந்தால், டோர்பங்கில் சில கி.மீட்டர்கள் முன்னால் அசாம் ரைபிள்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும். இதற்கு இடையில் BSF மற்றும் CRPF படைகளை காணலாம்.
தீ வைக்கும் நோக்கில் ஒரு பக்கத்தினர் இன்னொரு பக்கம் போகும்போதுதான் கொலைகள் நடக்கின்றன. வியாழன் அன்று Hraothel பகுதியில், மெய்தே கும்பல் குக்கிகளின் வீடுகளை எரிக்க முயன்றபோது நடந்த தாக்குதலில், இரண்டு மெய்தி குடிமக்கள் இறந்தனர்.
சில குக்கிகள் மற்றொரு பகுதியில் உள்ள மெய்தே மக்களின் வீடுகளை எரிக்க முயற்சித்ததன் எதிரொலிதான் இது. இது ஒரு சுழற்சியாகும், இது ஒரு வலுவான இடையக மண்டலத்தை பராமரிப்பதன் மூலம் உடைக்க முயற்சிக்கிறோம், என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இத்தம் கிராமத்தில் இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட 12 காங்லேய் யவோல் கண்ணா லுப் கிளர்ச்சியாளர்களை விடுவிக்க ஒரு கும்பலால் கட்டாயப்படுத்தப்பட்ட ராணுவம், ஆபரேஷனை நடத்துவதற்கு முன்பு மணிப்பூர் டிஜிபியை நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று பாதுகாப்பு ஸ்தாபனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.
மணிப்பூர் காவல்துறை அவர்கள் விடுவிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் படைக்குள் பிளவு நிஜம். ஒருவேளை ஆபரேஷன் வேறு விதமாக திட்டமிடப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் படைகளுக்கு மத்தியில் சிறந்த ஒருங்கிணைப்பு, செய்வதை விட சொல்வது எளிதானது என்பதை இது காட்டுகிறது, என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil