நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது, மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி தானாக முன்வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் வலியுறுத்தியது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு மத்தியில் கேள்வி நேரத்தை தொடங்கிய மக்களவை, தொடர்ந்து அமளி நீடித்ததால், அவை நடவடிக்கைகளை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தது.
மகாத்மா காந்தி சிலை முன்பு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியதுடன் இன்றைய நாள் தொடங்கியது,
சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முதலில் வந்த பாஜக எம்பிக்கள், “ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது” என்று ஆவேசமாகப் பேசினர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கையில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம், என்று ராஜஸ்தானின் பாஜக எம்பி தியா குமாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பிறகு எதிர்கட்சியினர் அங்கு போராட்டம் நடத்த வந்தபோது, சில பாஜக உறுப்பினர்கள் சிலை முன் இருந்து நகர மறுத்தனர். இதனால், அதிக எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள், எதிரே இருந்த பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் படிக்கட்டுகளில், அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
”இந்தியா இரு அவைகளிலும் பிரதமரின் அறிக்கையை கோருகிறது” என்ற பெரிய பதாகையை ஏந்திய அவர்கள், “எங்களுக்கு நீதி வேண்டும்”, “பதில் சொல்லுங்கள் நரேந்திர மோடி” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் பத்து நிமிடங்கள் நீடித்தது, பின்னர் அவர்கள் அந்தந்த அவைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடர கலைந்து சென்றனர்.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மணிப்பூர் நிலவரத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் சபைக்கு வந்து, தானாக முன்வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார். எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியபோதும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலையிட்டு, காங்கிரஸ் தலைவரை எதிர்க்க முயன்றார்.
சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களிடம், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நீங்கள் விவாதம் செய்யலாம், ஆனால் யார் பதிலளிப்பார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிப்பார்,என அவர் கூறியது எதிர்க்கட்சியினரை, இருக்கைகளை விட்டு சபைக்கு கீழே வரத் தூண்டியது.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார் பிர்லா. அவைத் தலைவர் ராஜ்நாத் சிங்கும், விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டவில்லை என்று கூறினார்.
பின்னர் சபாநாயகர் கேள்வி நேரத்தை எடுத்துக் கொண்டார் மற்றும் அமைச்சர்கள் அன்றைய தினம் பட்டியலிடப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவரது முறையீட்டை எதிர்க்கட்சிகள் நிராகரித்ததையடுத்து, சபாநாயகர் அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.