மணிப்பூர் இனக்கலவரம்; விசாரணைக்கு காவல்துறை அதிகாரி, நீதிபதிகள் குழுவை அறிவித்த உச்ச நீதிமன்றம்

மணிப்பூர் இனக்கலவரம்; சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட மும்பை முன்னாள் காவல்துறை அதிகாரி; மனிதாபிமான அம்சங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மணிப்பூர் இனக்கலவரம்; சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட மும்பை முன்னாள் காவல்துறை அதிகாரி; மனிதாபிமான அம்சங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur violence

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 1, 2023, இம்பாலில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், குக்கி-ஜோ சமூகத்தின் வீடுகளில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். (PTI புகைப்படம்)

மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் தொடர்பான சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தாத்ரே பட்சல்கிகரையும், மனிதாபிமான அம்சங்களை ஆராய ஓய்வுபெற்ற ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவையும் நியமிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முன்மொழிந்தது.

Advertisment

"விசாரணையை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி தத்தாத்ரே பட்சல்கிகர் ஆவார், அவர் மிகவும் பிரபலமான அதிகாரி ஆவார். அவர் என்.ஐ.ஏ.,வில் பணியாற்றியவர், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர், 1990களில் நாகாலாந்தில் பணியாற்றியவர். அவர் மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்த அதிகாரி,” என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது.

இதையும் படியுங்கள்: காங்கிரஸ் உடன் சீன தொடர்புகள்: நியூயார்க் டைம்ஸ் செய்தி… லோக் சபாவில் பேசிய பா.ஜ.க எம்.பி

நீதிபதி மிட்டல் குழுவில் நீதிபதிகள் ஷாலினி பன்சக்லர் ஜோஷி மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

Advertisment
Advertisements

விசாரணையில், "சி.பி.ஐ.,க்கு மாற்றாகப் போவதில்லை, ஏனென்றால் விசாரணையைக் கவனிக்கும் புலனாய்வு நிறுவனம் எங்களிடம் உள்ளது" என்று நீதிமன்றம் கூறியது.

சி.பி.ஐ விசாரித்து வரும் வழக்குகளை மேற்பார்வையிட, குறைந்தபட்சம் டெபுடி எஸ்.பி அல்லது எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஐந்து அதிகாரிகள் பிற மாநிலங்களில் இருந்து தற்காலிக பணியிட மாறுதலில் நியமிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த அதிகாரிகள் சி.பி.ஐ.,யின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டுச் செயல்படுவார்கள், என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணையின் கூடுதல் அடுக்காக, "விசாரணையில் பரந்த அனுபவமுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தத்தாத்ரே பட்சல்கிகர்... விசாரணையின் தன்மையை மேற்பார்வையிடுவார்" என்று நீதிமன்றம் கூறியது.

சி.பி.ஐ.,க்கு மாற்றப்படாத எஃப்.ஐ.ஆர்.,களை 42 சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் பரிசீலிக்கும் என்று கூறிய நீதிமன்றம், எஸ்.ஐ.டி.,களில் ஒரு இன்ஸ்பெக்டரை மற்ற மாநிலங்களில் இருந்து டெப்டேஷனில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியது.

எஸ்.பி., பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியின் தலைமையில் இருக்கும் எஸ்.ஐ.டி., மணிப்பூருக்கு வெளியே உள்ள ஆறு டி.ஐ.ஜி., நிலை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Manipur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: