மணிப்பூர் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியின் வீட்டை தீ வைத்து எரித்த சொந்த கிராம பெண்கள்
மணிப்பூர் வன்முறையில் பெண்கள் மீது கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் குக்கி-ஜோமி பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த மோதல் சம்பவத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரண்டு குக்கி-ஜோமி பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisment
இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இளம் பெண்களை நிர்வாணமாக்கிய கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹுயர்ம் ஹெரோடாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்.
“மெய்தேயி அல்லது பிற சமூகங்களாக இருந்தாலும், ஒரு பெண்ணாக, ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர் நம் சமூகத்தில் இருக்க அனுமதிக்க முடியாது. இது முழு மெய்தே சமூகத்திற்கும் அவமானம், ”என்று மீரா பைபி அமைப்பு தலைவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil