Advertisment

மணீஷ் சிசோடியாவின் வீட்டிலிருந்து ராஜ்காட் வரை.. கைதாகும் முன் நடந்தது என்ன?

விசாரணைக்கு செல்வதற்கு முன், சிசோடியா ராஜ்காட்டில் எம்பிக்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா மற்றும் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் சுமார் 15 நிமிடங்கள் செலவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manish Sisodia arrest

தனது தாயுடன் சிசோடியா

தனது மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முதல் டெல்லியின் பள்ளிக் குழந்தைகளுக்கான செய்தி வரை - ஞாயிற்றுக்கிழமை சிபிஐயால் விசாரிக்கப்படுவதற்கு முன்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisment

ஏஜென்சியின் அலுவலகத்திற்கு வெளியே அதிகரித்த பாதுகாப்பு முதல் முக்கிய சாலைகள் தடைசெய்யப்படுவது வரை மூத்த ஆம் ஆத்மி தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டது வரை மற்ற அறிகுறிகளும் இருந்தன.

”கடவுள் உன்னுடன் இருக்கிறார் மணீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆசிகள் உங்களுடன் உள்ளன. நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் சிறைக்குச் சென்றால் அது சாபமல்ல, பெருமை. நீங்கள் விரைவில் சிறையில் இருந்து திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் டெல்லி மொத்தமும் உங்களுக்காக காத்திருப்பார்கள்” என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காலையில் ட்வீட் செய்தார்.

அவர் விசாரணைக்கு செல்வதற்கு முன், சிசோடியா ராஜ்காட்டில் எம்பிக்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா மற்றும் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் சுமார் 15 நிமிடங்கள் செலவிட்டார்.

பிஜேபி மற்றும் சிபிஐக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வெளியில் கூடியிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோள் விடுத்த அவர், தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறு டெல்லி மக்களைக் கேட்டுக் கொண்டார்: “நான் சுமார் ஏழு-எட்டு மாதங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஜெயிலுக்குப் போவதைப் பற்றி எனக்குப் பயம் இல்லை, உடல்நிலை சரியில்லாத என் மனைவியை நினைத்துதான் எனக்கு கவலை. நீங்கள் அனைவரும் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

முந்தைய நாள், கட்சித் தலைவர்கள் அவர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டனர், அதற்கு உங்கள் குடும்பத்தை நாங்கள் கவனித்துக்கொள்வோம் மணீஷ், கவலைப்பட வேண்டாம் கெஜ்ரிவால் பதிலளித்தார்.

சிசோடியா கெஜ்ரிவாலை தனது நெருங்கிய நண்பர் என்றும் அரசியல் குரு என்றும் அழைத்தார். "கெஜ்ரிவால் ஜி... இந்த நாட்டின் ஒரே நம்பிக்கையும் எதிர்காலமும் நீங்கள்தான்... தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யுங்கள், உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது."

தனக்கு எதிரான வழக்கு பொய்யானது என்று அவர் கூறினார்: “நண்பர்களே, இவர்கள் இன்று என்னைக் கைது செய்யப் போகிறார்கள்... என் மீது பதிவு செய்யப்பட்ட இந்த பொய் வழக்குகள் நீதிமன்றத்தில் தவறு என்று நிரூபிக்கப்படும், நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, ஆனால் இதற்கு நேரம் ஆகலாம்.

நான் பல மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் பகத்சிங்கின் மகன்கள். பகத்சிங் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தார், சிறை என்பது ஒரு சிறிய விஷயம்.

தனது மனைவியைப் பற்றிப் பேசிய சிசோடியா, “எனது எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என் மனைவி எனக்கு எப்போதும் துணையாக இருந்தாள். எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒரு நிருபராகப் பணிபுரிந்தேன், என் தொழில் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள், நான் அதையெல்லாம் விட்டுவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஜியுடன் சேர்ந்தேன். ஜுக்கி ஜோப்ரிஸ் மக்களுக்காக அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். நிதி தேவை இருந்தது, ஆனால் என் மனைவி எனக்கு முழு ஆதரவை வழங்கினார்... இப்போது நான் சிறைக்குச் செல்வதால், நான் அவளைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன்... எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார், அவர் கனடாவில் படிக்கிறார். என் மனைவி தனியாக இருக்கிறாள், நீங்கள் அனைவரும் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

சிசோடியா தனது கைதை ஆம் ஆத்மியின் தேசிய விரிவாக்கத்துடன் தொடர்புபடுத்தினார்: “அரசியலில் கெஜ்ரிவாலின் எழுச்சியைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இன்று, பிரதமர் மோடி ஜி, ராகுல் காந்தியைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை, அவர் ஒருவருக்கு மட்டுமே பயப்படுகிறார், அதுதான் கெஜ்ரிவால் என்றார்.

மேலும் டெல்லியின் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் ஒரு செய்தியையும் வைத்திருந்தார்: “உங்கள் சாச்சா ஜி சிறைக்குச் செல்கிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் இது உங்களுக்கு விடுமுறை என்று அர்த்தமல்ல. நான் ஏழு-எட்டு மாதங்கள் சிறையில் இருக்கலாம் ஆனால் உங்கள் செயல்திறன் பற்றிய அனைத்து அறிவிப்புகளையும் பெறுவேன்.

உங்கள் பெற்றோரை தொந்தரவு செய்யாதீர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்று நமது பள்ளிகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும். உங்கள் மனிஷ் சாச்சாவை சிறையில் கஷ்டப்படுத்தாதீர்கள், நன்கு படிக்கவும். இல்லாவிட்டால் நான் சாப்பிடமாட்டேன் என்று சிசோடியா உணர்ச்சிப்ப கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment