Advertisment

Manmohan Singh Death News Updates: முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்; திரௌபதி முர்மு, மோடி இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி மத்திய அரசு ஜனவரி 1ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MS funa1

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டிச.26-ம் தேதி இரவு மரணமடைந்தார். தொடர்ந்து அவரது உடலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர்,பிரதமர் மோடி, அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

Advertisment

இன்று (டிச.28) டெல்லி யமுனை நதிக்கரையில் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன்  மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.  மன்மோகன் சிங் மறைவையொட்டி மத்திய அரசு ஜனவரி 1ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

  • Dec 28, 2024 13:20 IST
    21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை; மன்மோகன் சிங் உடல் தகனம்

    21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முப்படைகள் மரியாதை நடந்தது. 
    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர். 



  • Dec 28, 2024 12:37 IST
    திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி

    டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 28, 2024 12:36 IST
    மோடி இறுதி அஞ்சலி 

    டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.



  • Dec 28, 2024 12:24 IST
    மன்மோகன் சிங்-ன் இறுதி ஊர்வலம் -  ராகுல் காந்தி பங்கேற்பு 

    டெல்லியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் இறுதி ஊர்வலத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். 



  • Dec 28, 2024 11:48 IST
    நிகம்போத் காட் வந்தடைந்த மன்மோகன் சிங் உடல்

    முன்னாள் பிரதமருக்கு நிகம்போத் காட் பகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்படுகிறது. இதையொட்டி பாஜக முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகம்போத் காட் வந்தடைந்ததை ஏ.என்.ஏ வீடியோவில் காணலாம்.



  • Dec 28, 2024 10:32 IST
    மன்மோகன் சிங்-ன் இறுதி ஊர்வலம் தொடங்கியது

    மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படுகிறது. 



  • Dec 28, 2024 09:44 IST
    மன்மோகன் சிங் உடலுக்கு கார்கே, ராகுல் இறுதி அஞ்சலி

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 



  • Dec 28, 2024 09:39 IST
    மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம் ஒதுக்கப்படும்- மத்திய அரசு

    மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும். அறக்கட்டளை அமைக்கப்பட்ட பிறகே நினைவகத்திற்கான இடம் ஒதுக்க முடியும். மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகே கார்கே, மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. 

    மன்மோகன் சிங் நினைவகம் தொடர்பாக மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.



  • Dec 28, 2024 09:07 IST
    மன்மோகன் சிங் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு

    டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்.

    யமுனை நதிக்கரையில் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

    முன்னதாக பொதுமக்கள் அஞலிக்காக காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உடல் சற்று நேரத்தில் வைக்கப்பட உள்ளது.



  • Dec 27, 2024 21:52 IST
    இந்தியா-ரஷ்யா உறவுகளை உயர்த்துவதில் மன்மோகனின் பங்கை நினைவு கூர்ந்த புதின்

    ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று விவரித்தார் மற்றும் இந்தியா-ரஷ்யா உறவுகளை 'சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய' கூட்டாண்மைக்கு உயர்த்துவதில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

    புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் மன்மோகன் சிங் நிறைய சாதித்துள்ளார்.

    டிசம்பர் 2010 இல் ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை 'சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    2004 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்து, இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என்று பரவலாக அறியப்பட்ட மன்மோகன் சிங், வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 92.

    "பிரதமராகவும், மற்ற உயர் பதவிகளில் பணியாற்றும்போதும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார்" என்று புதின் கூறினார்.

    மன்மோகன் சிங்குடனான தனது உரையாடல்களையும் புதின் குறிப்பிட்டார். “இந்த குறிப்பிடத்தக்க மனிதருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நினைவை போற்றுவோம்,'' என்றார்.

    மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில் சனிக்கிழமை காலை 11:45 மணிக்கு நடைபெற உள்ளது.



  • Dec 27, 2024 20:13 IST
    மன்மோகன் இறுதிச் சடங்கு; மோடியிடம் கார்கே வலியுறுத்தல்

    மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.



  • Dec 27, 2024 19:50 IST
    மன்மோகன் சிங், தான் வகித்த ஒவ்வொரு பதவிக்கும் புத்திசாலித்தனம், தனித்துவத்தை கொண்டு வந்தார் - சோனியா காந்தி

    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தான் வகித்த ஒவ்வொரு உயர் பதவிக்கும் புத்திசாலித்தனத்தையும் தனித்துவத்தையும் கொண்டுவந்தார் என்றும், அவர் இந்தியாவுக்கு பெருமையை கொண்டு வந்ததாகக் கூறினார். "காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஒளிரும் மற்றும் பிரியமான வழிகாட்டி விளக்கு, அவரது கருணை மற்றும் தொலைநோக்கு மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து அதிகாரம் அளித்தது" என்று சோனியா காந்தி கூறினார். "உலகம் முழுவதிலும் உள்ள தலைவர்கள் மற்றும் அறிஞர்களால் மதிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட அவர், மகத்தான ஞானம் மற்றும் அந்தஸ்துள்ள ஒரு அரசியல்வாதியாகப் போற்றப்பட்டார்," என்று சோனியா காந்தி கூறினார்.



  • Dec 27, 2024 18:42 IST
    நாளை காலை 9.30 மணிக்கு மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்

    மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இறுதி அஞ்சலிக்காக நாளை காலை 8 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. 9.30 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.



  • Dec 27, 2024 17:47 IST
    மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் கோரி மத்திய அரசை அணுகிய காங்கிரஸ்

    வியாழக்கிழமை மரணமடைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தில்லியில் உள்ள யமுனை நதிக்கரையோரம், முன்னாள் பிரதமர்கள் பலரின் நினைவிடங்கள் உள்ள பகுதியில் நினைவிடம் வழங்கக் கோரி மத்திய அரசை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அணுகியது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. தனித்தனியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் வெள்ளிக்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இதுதொடர்பாக அணுகினர்



  • Dec 27, 2024 17:28 IST
    பாரதத்திற்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் - ஆர்.எஸ்.எஸ்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    “பாரதத்தின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மூத்த தலைவருமான டாக்டர் சர்தார் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒட்டுமொத்த தேசமும் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அன்புக்குரியவர்களுக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

    மன்மோகன் சிங், தாழ்மையான பின்னணியில் இருந்து வந்தாலும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



  • Dec 27, 2024 14:53 IST
    மன்மோகன் சிங் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  



  • Dec 27, 2024 13:52 IST
    அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் அடக்கம் செய்ய முடிவு 

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூடி இரங்கல் தெரிவித்தனர்.முப்படைகளின் முழு அரசு மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  



  • Dec 27, 2024 13:26 IST
    புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் இரங்கல் 

    "முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது.அவர், நாட்டின் மிக உயரிய பதவிகளை அலங்கரித்து, அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக திகழ்ந்தார். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் அரசியல் கடந்து இன்றளவும் எல்லோராலும்  பாராட்டப்படுகிறது.

    பேராசிரியராக, பொருளாதார நிபுணராக, ரிசர்வ் வங்கியின் தலைவராக, பாரதப் பிரதமராக அவர் ஆற்றிய பணிகளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். " என்று புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார். 



  • Dec 27, 2024 11:53 IST
    "மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு"

    மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எளிமையான அடையாளமாக திகழ்ந்த மன்மோகன் சிங்குடன் தான் உரையாடியது நினைவில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 11:51 IST
    மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி

    மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



  • Dec 27, 2024 10:47 IST
    மன்மோகன் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



  • Dec 27, 2024 10:09 IST
    தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

    மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (டிச 28) முதல் ஜனவரி 1 வரை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என  தமிழாடு அரசு அறிவித்துள்ளது.



  • Dec 27, 2024 09:41 IST
    அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டார்.



  • Dec 27, 2024 09:37 IST
    மன்மோகன் சிங் மறைவுக்கு வைகோ இரங்கல்

    மன்மோகன் சிங் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என வைகோ குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 27, 2024 09:20 IST
    மன்மோகன் சிங்கிற்கு கமல்ஹாசன் இரங்கல்

    மன்மோகன் சிங்கிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் மூலம் இந்தியாவை, மன்மோகன் சிங் சீரமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 09:17 IST
    மன்மோகன் சிங் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நாளை (டிச 28) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. அதன்படி, அரசு மரியாதையுடன் நாளை பிற்பகல் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 27, 2024 09:12 IST
    வெள்ளை மாளிகை இரங்கல்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவரது பங்களிப்புகள் மறக்க முடியாதவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Dec 27, 2024 08:56 IST
    மன்மோகன் சிங் குறித்து நினைவு கூர்ந்த வைரமுத்து

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்திய பொருளாதாரம் தனது ஒரு சிறகை இழந்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 08:34 IST
    மன்மோகன் சிங்கிற்கு நிர்மலா சீதாராமன் இரங்கல்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தாராளமயமாக்கலுக்கு வழிவகுத்து வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை 1991-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 27, 2024 08:31 IST
    ஸ்டாலின் டெல்லி பயணம்

    மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இன்று காலை 9:30 மணியளவில் அவர் டெல்லி புறப்படுகிறார்.



  • Dec 27, 2024 08:24 IST
    பா.ஜ.க ஆர்ப்பாட்டங்கள் ரத்து

    பா.ஜ.க சார்பில் இன்று மாவட்டங்களில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மன்மோகன் சிங் மறைவையொட்டி, ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 08:18 IST
     "ஈடு இணையற்ற பொருளாதார வல்லுநர்": மல்லிகார்ஜுன கார்கே

    ஈடு இணையற்ற பொருளாதார வல்லுநராக மன்மோகன் சிங் திகழ்ந்தார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியாகவும்,  குறை சொல்ல முடியாத ஒருமைப்பாட்டின் தலைவராகவும் அவர் செயல்பட்டார் என மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Dec 27, 2024 08:12 IST
    மன்மோகன் சிங் மறைவு - திரௌபதி முர்மு இரங்கல்

    மன்மோகன் சிங் மறைவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில், மன்மோகன் சிங் முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 27, 2024 08:09 IST
    காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து

    நாளை (டிச 28) நடைபெறவிருந்த காங்கிரஸ் நிறுவன நாள் உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் மறைவையொட்டி, நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Manmohan Singh Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment