Advertisment

‘ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்தியது இல்லை’; மோடி மீது மன்மோகன் சிங் கடும் விமர்சனம்

கடந்த மாதம், ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, “நாட்டின் செல்வத்தில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு” என்று மன்மோகன் சிங்கின் அரசு கூறியது என்று பேசினார்.

author-image
WebDesk
New Update
Manmohan Sigh

மக்களவைத் தேர்தல் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். (PTI Photo)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று மன்மோகன் சிங் கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  “ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்தவில்லை” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Never distinguished one community from another’: Manmohan Singh’s dig at PM Modi

மக்களவைத் தேர்தல் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால், நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழை கூறியிருப்பதாவது: “தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் நான் மிகவும் எச்சரிக்கையுடன் அரசியல் விவாதங்களை கவனித்து வருகிறேன். மோடி இழிவான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார், அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். பிரதமர் பதவியின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் தீவிரத்தையும் குறைத்த முதல் பிரதமர் மோடி. ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்க முந்தைய பிரதமர்கள் இதுபோன்ற கீழ்த்தரமான, நாகரீகமற்ற மற்றும் கீழ்த்தரமான மொழியைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் என்னிடம் சில தவறான அறிக்கைகளையும் கொடுத்துள்ளனர். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. வேறுபடித்திப் பார்ப்பது பா.ஜ.க-வின் சிறப்பு உரிமை, பா.ஜ.க-வின் பழக்கம்.” என்று சாடியுள்ளார்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறியதாவது: பஞ்சாபின் ஒவ்வொரு வாக்காளரும் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து இளைஞர்களும் கவனமாக வாக்களித்து, எதிர்காலத்திற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும் வளர்ச்சியை வழிநடத்தும் முற்போக்கான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ராஜஸ்தானில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, தாய்மார்கள் மற்றும் மகள்களிடம் உள்ள தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது.” என்று கூறினார்.

டிசம்பர் 2006-ல் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், ”வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டார்.  “நம்முடைய கூட்டு முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பின் அத்தியாவசிய பொது முதலீட்டுத் தேவைகள், எஸ்சி, எஸ்டி-க்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களுடன். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான உட்கூறு திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் அதிகாரத்தைப் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். அடுத்த நாள், பிரதமர் அலுவலகம் மன்மோகன் சிங்கின் ‘வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்’ “எஸ்சிக்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உட்பட அனைத்து ‘முன்னுரிமை’ பகுதிகளையும் குறிக்கிறது…” என்று தெளிவுபடுத்தியது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் பொருளாதாரம் குறித்து பா.ஜ.க-வைத் தாக்கினார். “கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்னையைச் சந்தித்துள்ளது. பணமதிப்பு நீக்கம், தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மோசமான நிர்வாகம் ஆகியவை மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. சராசரிக்கும் கீழே 6-7 சதவீத ஜி.டி.பி வளர்ச்சி சாதாரணமாகிவிட்டது. பா.ஜ.க ஆட்சியில் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவும், காங்கிரஸ்-யு.பி.ஏ ஆட்சியின் போது 8 சதவீதமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

மேலும், மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது: “காங்கிரஸ் - யு.பி.ஏ ஆட்சியின்போது, சவால்கள் இருந்தபோதிலும், நமது மக்களின் வாங்கும் சக்தியை தொடர்ந்து அதிகரித்தாலும், பா.ஜ.க அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் குடும்ப சேமிப்புகளை 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைத்துள்ளது.” என்று சாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Former Pm Manmohan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment