பேசாத பிரதமர், ஊமை பிரதமர் என்று ஒரு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பல நாட்கள் பேசமாமல் அமைதி காத்த மன்மோகன், இப்படியெல்லாம் பேசுவாரா என்று ஆச்சரியப்பட வைத்த நாள் தான் அது.
மோடி அரசுக் கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் பட்ட சிரமத்தையும், அந்த நடவடிக்கையால் இந்தியாவிற்கு வந்தது என்ன? போனது என்ன? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசிய அந்த 20 நிமிடம் இந்திய மக்களை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதன் பிறகு, இந்தியாவையே உலுக்கிய இரண்டு பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடுமையான கோபத்தில் மீண்டும் மோடி அரசை கேள்வி எழுப்பியுள்ளார் மன்மோகன் சிங். ஆங்கில நாளிதழான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ தமிழில்… உங்கள் பார்வைக்கு..
கேள்வி: கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உங்கள் கருத்து?
பதில்: ”சந்தேகமே வேண்டாம் மோடி அரசு தோற்று விட்டது. பெண்கள் பாதுகாப்பில் மோடி அரசு பகீரங்கமாக தோற்று விட்டது. மோடி அவர்கள், குறிப்பிட்டிருந்தார் ”இந்தியாவின் மகள்கள் இருவருக்கும் நியாமல் கிடைக்கும்” என்றும்., இப்படி நியாம் கிடைக்கும் என்று அவர் கூறுவதற்கே இரண்டு நாட்கள் ஆகியது என்றால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று பாருங்கள்.
இந்த விவகாரத்தில் மோடி என்னிடம் வந்து பாடம் படிக்க வேண்டும். என் அறிவுரையை கேட்க வேண்டும். அந்த நிலைமையில் தான் அவர் இருக்கிறார். எனக்கு தெரியும் அவர் அடிக்கடி என்னை குறை கூறுவது நான் பேசமாட்டேன் என்று. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் நான் கட்டாயம் பேசுவேன். அதை அவரே நேரடியாக பார்த்து இருக்கிறார்.
2012 ஆம் ஆண்டும் டெல்லியில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையின் போது காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அடுத்த கணமே குற்றவாளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால், கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரத்தில் மோடி அரசு இதுப்போன்று ஒரு துரித நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
காஷ்மீர் முதலமைச்சர் மெகபூவா முஃப்தி, கூறியது போல் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்ற சட்டம் கொண்டு வர வேண்டும். கத்துவா சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, 2 பிஜேபி அமைச்சர்கள் பேரணியில் கலந்துக் கொண்டது மன்னிக்க முடியாத செயல். இந்த விவகாரத்தில் மெகபூவா உடனடியான நடவடிக்கையை எடுக்க அவரின், கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பிஜேபி அமைச்சர்கள் தடையாக நிக்கலாம் யாருக்கு தெரியும்.
8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை விட, இந்தியாவிற்கு வெட்க கேடான செயல் வேறு இருக்குமா? இந்தியாவில், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இவை தடுக்கப்படாமல் இருந்தால் ஒரு நாள் ஜனநாயகமே அழிந்து விடும்.
கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரம் மட்டுமில்லை பாஜகவினர் செய்யும் பல்வேறு அட்டூழியங்களை மோடி கண்டும் காணாமல் தான் இருக்கிறார். மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக மாறியுள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் என்று இவர்கள் பிரித்து வைத்து அரசியல் நடத்துவது எற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சட்டங்களும் களத்தில் இருக்கும் அரசிற்கு சாதகமாகவே செயல்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.