Advertisment

மன்மோகன் சிங் அசாதாரணமானவர்; ஆனால் யு.பி.ஏ..? இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பேட்டி

​​உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் தகுதியான போட்டியாளராக இந்தியாவை இளைஞர்களால் உருவாக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Manmohan Singh was extraordinary but India stalled during UPA-era: Narayana Murthy

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

அகமதாபாத்தில் உள்ள இந்தியன் யூனியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இளம் தொழில் முனைவோர் மற்றும் மாணவ- மாணவிகளுடன் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி வெள்ளிக்கிழமை (செப்.23) கலந்துரையாடினார்.

அப்போது, “​​உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் தகுதியான போட்டியாளராக இந்தியாவை இளைஞர்களால் உருவாக்க முடியும்” என்றார்.

Advertisment

தொடர்ந்து அவர் பேசுகையில், “நான் லண்டனில் HSBC குழுவில் 2008 மற்றும் 2012 க்கு இடைபட்ட பகுதியில் பணியாற்றினேன். அப்போது பொருளாதாரத்தில் சீனாவின் பெயர் இரண்டு அல்லது மூன்று முறை குறிப்பிடப்பட்டால் இந்தியாவில் பெயர் ஓருமுறை குறிப்பிடப்படும்.

மன்மோகன் சிங் ஒரு அசாத்தியமான மனிதர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் ஐக்கிய முற்போக்கு முன்னணி (காங்கிரஸ் தலைமையிலான யூபிஏ) காலத்தில் எப்படியோ ஸ்தம்பித்துவிட்டது. சரியான முடிவுகள் சரியான காலத்தில் எட்டப்படவில்லை. தாமதமாகிவிட்டன” என்றார்.

தொடர்ந்து தாம் ஹெச்.பி.எஸ்.இ. நிறுவனத்தை விட்டு விலகிய போது, 2012 பொருளாதார கூட்டங்களில் இந்தியாவின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் சீனாவின் பெயர் கிட்டத்தட்ட 30 முறை பேசப்பட்டது” என்றார்.

மேலும், “வேறொரு நாட்டின் வளர்ச்சியை பற்றி குறிப்படும் போதெல்லாம் நம் நாட்டின் வளர்ச்சியையும் குறிப்பிட வேண்டும். இது இன்றைய இளைஞர்களின் பொறுப்பு. இதனை அவர்கள் சரியாக செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை இழிவாக பார்த்தன. தற்போது குறிப்பிடத்தக்க மரியாதை ஏற்பட்டுள்ளது. நாடு உலகின் 5ஆவது பொருளாதாரமாக மாறியுள்ளது.

1991இல் மன்மோகன் சிங் ஏற்படுத்திய பொருளாதார சீர்திருத்தம், தற்போதைய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் நாடு முன்னேற உதவி புரிகின்றன.

ஆகவே இன்றைய இளைஞர்களால் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று,சீனாவின் தகுதியான போட்டியாளராக மாற்ற முடியும்” என்றார்.

மேலும் கடந்த 44 ஆண்டுகளில் சீனா பல விஷயங்களில் முன்னேறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது மூர்த்தி, “சீனப் பொருளாதாரம் இந்தியாவை விட ஆறு மடங்கு பெரியது. 1978 முதல் 2022 வரையிலான 44 ஆண்டுகளில், சீனா இந்தியாவை பல விஷயங்களில் பின்தங்கச் செய்துள்ளது.

வரும் காலங்களில் நாம் குறிப்பிடத்தக்க காரியங்களை செய்தால் இந்தியாவுக்கு உரிய மரியாதை கிடைக்கும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Infosys Narayanamurthy Infosys
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment