manmohan singh, manmohan singh latest news, manmohan singh news, manmohan singh health, manmohan singh health news, manmohan singh health update, former pm manmohan singh, manmohan singh today news, manmohan singh health today update, former pm manmohan singh health, aiims, mamohan singh aiims
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், மே 11ம் தேதி காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அவரின் உடல் பாகங்கள் தற்போது சீராக இயங்கி வருகின்றன,இருந்தபோதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில், எய்ம்ஸ் மருத்துவமனையில், மன்மோகன் சிங்கிற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisement
மன்மோகன் சிங் விரைவில்உடல்நலம் பெற அரசியல் கட்சி தலைவர்கள் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மே 10ம் தேதி மாலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது, கார்டியோ - தொராசிக் ஆய்வு மையத்தின் ஐசியு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது, 87 வயதான மன்மோகன் சிங், இதயத்துறை பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் என்பவரின் கண்காணிப்பில் உள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மன்மோகன் சிங், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விசயம் குறித்து கவலையுற்றேன். அவர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil