Mann Ki Baat Narendra Modi addresses nation through AIR broadcast : இன்று காலை 11 மணி அளவில் அனைத்திந்திய ரேடியோ நிலையத்தில் இருந்து மக்களுக்காக உரையாற்றினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் நாட்டின் வளர்ச்சி குறித்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் உரை நிகழ்த்துவது மோடியின் வழக்கம். அமெரிக்கா சென்று தாயகம் திரும்பியுள்ள மோடி, 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் என்பதால் அதனை குறித்து நாடு செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து உரையாற்றினார்.
Celebrating the power of 130 crore Indians, igniting a spirit of positivity across our nation.
Do tune in to another episode of #MannKiBaat tomorrow at 11 AM. pic.twitter.com/w6LRMRlsaO
— Narendra Modi (@narendramodi) September 28, 2019
மேலும் படிக்க : மோடியின் 54வது மன் கீ பாத் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Mann Ki Baat Narendra Modi addresses
தன்னுடைய கடைசி மன் கி பாத் உரையில் தூய்மை இந்தியா குறித்தும் ப்ளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்துதல் குறித்தும் காலநிலை மாறுபாட்டால் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா சென்ற அவர் 74வது ஐக்கிய நாடுகள் ஜெனரெல் அசம்பெலியில் பேசியுள்ளார். மேலும் ஹவுஸ்டனில் ஹவ்டி மோடி நிகழ்வில் கலந்து கொண்டு சுமார் 50 ஆயிரம் இந்தியர்களிடம் பேசியுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து ஆங்கில அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லதா மங்கேஷ்கர்
மன் கி பாத் உரையில் தன்னுடன் ஒரு சிறப்பு விருந்தினரும் பங்கேற்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்த அவர், பிரபல பாடகி லதா மங்கேஷ்கரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார் மோடி. மோடியின் மன் கி பாத் உரையை லைவ்வாக கேட்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
Tune-in to this month’s #MannKiBaat. https://t.co/aWdFG8aYdN
— Narendra Modi (@narendramodi) September 29, 2019
பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறிய மோடி
வருகின்ற பண்டிகை காலங்களை மனதில் கொண்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார் மோடி. இன்று முதல் நவராத்திரி துவங்குகிறது. புதிய சக்தி, சந்தோசம் மற்றும் புதிய எண்ணங்களை இந்த விழாக்காலம் மக்களுக்கு கொண்டு வரட்டும் என்று கூறினார் மோடி. பெண்களின் ஆக்க செயல்களை மனதில் கொண்டு பேசிய அவர், இந்த தீபாவளியில் இந்தியாவின் லட்சுமி தேவியை கொண்டாடுவோம் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸை மேற்கோள் காட்டிய மோடி
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடால், டேனியலை வீழ்த்தி பட்டம் வ்வென்றார். ஆனாலும் நடால் டேனியலை வாழ்த்தி பேசியிருந்தார். வெற்றி பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நடால் ஒரு உதாரணம் என்று மாணவர்களுக்காக கூறினார். மேலும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தொடர்ந்து மாணவர்களுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் தன்னை எழுதும் படி கேட்டுக் கொண்டதாக கூறினார் அவர்.
ப்ளாஸ்டிக் ஒழிப்பு
இந்தியாவின் முதல் ப்ளாகர் (ஜாக்கிங் செய்தபடி குப்பைகளை அகற்றும் சமூக ஆர்வலர் ) ரிப்பு தாமானிடம் பேசினார். மேலும் வருகின்ற அக்டோபர் 2ம் தேதி முதல் மக்கள் யாவரும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கை முற்றிலுமாக பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஃபிட் இந்தியா குறித்து மோடி
இ-சிகரெட்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உரையாடிய மோடி, அதனால் இளைஞர்கள் பெருமளவில் பாதிப்படைகிறார்கள். அதனால் தான் அதன் பயன்பாட்டை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நிகழ்வுக்கு தயாராகுங்கள்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தன்று ஒற்றுமைக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார் மோடி. சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளான அக்டோபர் 31ம் தேதி ஒற்றுமையை வேண்இ மக்கள் அனைவரும் இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.