Manohar Parikkar : பாஜகவில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராகவே இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியிலும் நன்மதிப்பினை பாஜக தலைவர் இவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
1955ம் ஆண்டு மபுசா என்ற மாவட்டத்தில் பிறந்தவர். பள்ளிக்காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளிலும் அதிக அளவு ஈடுபாடு செலுத்தி வந்தார்.
மத்திய அமைச்சராக பணியாற்றுவதற்கு முன்பு கோவாவின் முதல்வராக மூன்று முறை பணியாற்றியவர், கோவாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டவரும் கூட இவரே. 1994ம் ஆண்டில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெறும் நான்கே இடங்களில் தான் வெற்றி பெற்றது. அதில் மனோகர் பரிக்கரும் அடங்குவார்.
எம்.எல்.ஏ பின்பு எதிர்க்கட்சித் தலைவர் என்று வளர்ந்து 1999-ல் கோவாவின் முதல்வராக பணியாற்றத் துவங்கினார். 2014ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு, மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் ஐஐடியில் பட்டம் பெற்ற முதல் அமைச்சர் என்ற பெருமையுடன் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார்.
பணிவு மிக்க முதல்வராக மனோகர் பாரிக்கர்
அவரின் எளிமையான வாழ்வு முறை, தோற்றம், அமைதி மற்றும் பணிவு என அனைவரும் இன்று ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ளும் தலைவராகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஒரு முறை சாலையில் தன்னுடைய டூவிலரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் அவருடைய டூவிலரில் மோதி விபத்துக்குள்ளானது.
கோபமடைந்த காரில் பயணித்தவர் வெளியே வந்து பைக்கில் பயணித்த பாரிக்கரை திட்டிவிட்டு நான் யார் தெரியுமா , என் அப்பா பெயர் தெரியுமா, கமிஷ்னர் பையன் என்று மிரட்ட, ஆடையில் பட்ட தூசியினை தட்டிவிட்டு நான் வெறும் சி.எம்.தாம்பா, நான் தான் மனோகர் பாரிக்கர் என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
மேலும் படிக்க : ஆர்.எஸ்.எஸ் அடிப்படைத் தொண்டனில் இருந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வரை... யார் இந்த மனோகர் பாரிக்கர் ?