‘அப்பழுக்கற்ற ஒரு தலைவரை இழந்துவிட்டோம்’ – பிரதமர் மோடி இரங்கல்

மனோகர் பாரிக்கரின் மரணத்திற்கு பிரதமர் மோடி உருக்கமான பதிவு

Manohar Parrikar dead live updates
Manohar Parrikar dead live updates

Manohar Parrikar dead live updates : முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் கோவாவின் இந்நாள் முதல்வரமாக இருந்த மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் இன்று உயிரிழந்தார். கடந்த ஒரு வருடமாக புற்று நோய் தாக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அமெரிக்காவிலும், டெல்லியிலும் தொடர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க : ஆட்டம் காணும் கோவா சட்டசபை

Manohar Parrikar dead updates :

மனோகர் பாரிக்கரின் மரண செய்தியைக் கேட்டறிந்த தேசத் தலைவர்கள் தங்களின் ஆழந்த இரங்கலை மனோகரின் குடும்பத்தினருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

11:00 PM : பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “மனோகர் பாரிக்கர் ஒரு இணையற்ற தலைவர். உண்மையான தேசபக்தி மற்றும் சிறந்த நிர்வாகி, அனைவராலும் பாராட்டப்பட்டவர். இந்த தேசத்திற்காக அவர் செய்த அப்பழுக்கற்ற பணிகள் வரும் தலைமுறைகளால் நினைவுகூறப்படும். அவருடைய இறப்பினால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அவருடைய குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

10:45 PM : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல் செய்தி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மரண செய்தி கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளேன். எளிமையின் மறு உருவமாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டிருந்த ஒரு தலைவர் தற்போது நம்மிடம் இல்லை. அவருடைய இழப்பை அவரது குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள மன தைரியத்தை கடவுள் அவர்களுக்கு தரட்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

10:20 PM : மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் செய்தி

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய இரங்கல் செய்தியை அறிவித்துள்ளார். அதில் மிகவும் வலியையும் வேதனையையும் தருகிறது மனோகரின் மரணம். அமைதியான, நம்பிக்கை குணம் கொண்ட, பணிவான, கடினமாக உழைக்கும் ஒரு நல்ல தலைவனை இந்தியா இழந்துவிட்டது என்று ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.

10:00 PM : அசாம் முதல்வரின் இரங்கல் செய்தி

அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கோவாவின் முதல்வர் மற்றும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மரண செய்தி கேட்டு துயருற்றேன்.

மக்களின் தலைவர், அவருடைய அமைதியான பண்பிற்காகவும், நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பற்றிற்காகவும் அதிகம் மதிக்கப்பட்டவர். இந்திய அரசிய்லில் மாபெரும் வெற்றிடத்தை தந்துவிட்டு சென்றுவிட்டார். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

09:45 PM : திரிபுரா மாநில முதல்வரின் இரங்கல் செய்தி

மனோகர் பாரிக்கரின் மரண செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நாட்டிற்காகவும், கோவாவிற்காகவும் அவர் ஆற்றிய கடமைகளை இம்மண் என்றும் மறவாது. இந்த இழப்பினை தாங்கும் மன தைரியத்தை அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும். ஓம் சாந்தி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

09:30 PM : நிர்மலா சீதாராமன் இரங்கல் செய்தி

உண்மையான, நேர்மையான அரசியல் வாதி, மிகவும் எளிமையானவர். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் இந்நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது.

09:15 PM : பாஜக தலைவர் அமித் ஷா இரங்கல்

மனோகர் பாரிக்கரின் மரண செய்தி கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளேன். ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளனை தேசம் இழந்துவிட்டது. சுயநலமில்லாமல் நாட்டுக்காக தன்னை அர்பணித்துக் கொண்டாவர் அவர். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் முன்மாதிரியாக திகழ்ந்தவர் அவர்.

09:00 PM : மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி

நல்ல தலைவர், வழிநடத்தும் ஆசான், தோழர் என அனைத்துமாய் இருந்தார் மனோகர். ஒரு குடும்ப உறுப்பினரைப் போல. ஒவ்வொரு கோவா மக்களுக்கும் அவர் அப்படித்தான் இருந்தார். மோசமான சூழலிலும் விஸ்வாசத்துடனும் கண்ணியத்துடனும் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் மனோகர் பாரிக்கர் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி ட்வீட் செய்துள்ளார்.

08:45 PM : ப்ரியங்கா காந்தியின் இரங்கல் செய்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் “மனோகர் பாரிக்கரின் குடுமத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரே ஒருமுறை தான் நான் அவரை நேரில் சந்தித்துள்ளேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாத போது நேரில் வந்து பார்வையிட்டார். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

08:30 PM : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மரண செய்தியால் நான் மிகவும் வருத்தமுற்றிருக்கிறேன். துணிந்த மனதுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நோயுடன் போராடி வாழ்ந்துள்ளார்.

கட்சிகளைத் தாண்டியும் அவருடைய செயல்பாடுகளால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளேன். கோவாவின் விரும்பத்தக்க மக்களில் அவரும் ஒருவர். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

08:15 PM : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி

மனோகர் பாரிக்கரின் மரண செய்தியைக் கேட்டு மிகவும் கவலை அடைந்துள்ளேன். நாட்டுக்காகவும், கோவா மாநிலத்திற்காகவும் அவர் செய்த சமூகப் பணிகளை இந்தியா ஒரு போதும் மறவாது என்று ட்வீட் செய்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


;

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Manohar parrikar dead live updates political leaders pay tributes

Next Story
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!Goa Chief Minister Manohar Parrikar passes away - கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express