மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவ்வப்போது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் அத்தகைய கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டம் ஒன்றரை நாள் நடைபெற்றது. அதில், வெளிநாட்டினர் இங்கு வந்து படிக்கும் வகையில் இந்தியாவில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மற்றொன்று, சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நொய்டாவில் உள்ள தேசிய உயிரியல் நிறுவனத்தில் நடைபெற்றது. NIB நொய்டாவில் தங்கும் விடுதி இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை.
இரவு ஹாஸ்டலில் தங்கி அடுத்த நாள் அமர்வில் பங்கேற்றனர். அமைச்சகத்தின் வெவ்வேறு பங்குதாரர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் முறைசாரா தொடர்புகளை நடத்துவதே இதன் நோக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பயணம்
தேர்தலில் போருக்காக தயார்படுத்தும் வகையில், பாஜக அமைப்பு அளவில் மாற்றங்கள் செய்யவுள்ளது. டிஜிட்டல் சகாப்தத்தில் நுழைவதற்கு தன்னைத் தயார்படுத்துவதற்காக, மத்திய பிரதேச பாஜக புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 65,000 வாக்குச் சாவடிகளின் நிர்வாகிகளை தொடர்புகொள்வதற்காக இருவர் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தை கட்சியின் பொறுப்பாளர் பி முரளிதர் ராவ் வகுத்துள்ளார்.
ஒரு குழு உறுப்பினர் அரசியல் செயல்பாடுகளைக் கவனிக்கும் அதே நேரத்தில், மற்றொரு உறுப்பினர், புதிய Sanghatan செயலிக்கான பணியை மேற்கொள்வார். இதன் மூலம், நிர்வாகிகள் ரெஜிஸ்டர் செய்யவும், அவர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணியையும் மேற்கொள்ளவார்கள்.
இதுபோல் 10,000 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்களுக்கு ஆறு அல்லது ஏழு வாக்குச் சாவடி நிர்வாகிகளுடன் பணியாற்றுவார்கள்.
கிடைத்த தகவலின்படி, 62,000 வாக்குச் சாவடிகளின் பதிவு ஏற்கனவே நடந்துள்ளது. மக்கள் தொடர்புத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்தின் விவரங்களும் செயலியில் பதிவேற்றப்பட வேண்டும். இது மாநில தலைமையால், கட்சி செயல்பாடுகளைக் கண்காணிப்பதை எளிதாக்குகிறது. இத்திட்டம் மத்தியப் பிரதேசம் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டவுடன், மற்ற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil