Advertisment

வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பிய போது நடந்த சோகம்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் கதை

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 46 இந்தியர்களின் உடல்களை இந்திய விமானப்படை விமானம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தது

author-image
WebDesk
New Update
kuwait fire victims

Many who perished in Kuwait fire were close to winding up their stay abroad

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 46 இந்தியர்களின் உடல்களை இந்திய விமானப்படை விமானம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தது.

Advertisment

அவர்களில் 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், அவர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவர்களில் பெரும்பாலானோர் NBTC குழுமத்தின் பணியாளர்கள்.

மலப்புரத்தின் திரூர் கடற்கரையை சேர்ந்த கே நூஹ் (41) குவைத்தில் 11 ஆண்டுகளாக இருந்தார். ஒவ்வொரு வருடமும் வெளிநாடு வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகச் சொல்லி வீட்டுக்கு வருவார். ஆனால் பல கடமைகள் இன்னும் நிறைவேறாமல் இருப்பதால், மீண்டும் திரும்பிச் செல்வார்.

கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்தார்.

செவ்வாயன்று, அவர் தனது மனைவி பர்ஹாத்திடம் போனில் பேசினார். அவரது மூன்று மகள்களும் பள்ளியில் இருந்ததால் அவர்களுடன் பேச முடியவில்லை. புதன்கிழமை காலை வாட்ஸ்அப் கால் செய்வதாக அவர் சொன்னார், ஆனால் விதி அதை அனுமதிக்கவில்லை, ”என்று மலப்புரத்தில் உள்ள குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரர் அப்துல் பஷீர் கூறினார்.

25 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்த கண்ணூரைச் சேர்ந்த யு கே அனீஷ் குமார் (56) மீண்டும் தனது குடும்பத்துடன் வாழும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் தனது சொந்த ஊரான குருவாவுக்குத் திரும்பினார்.

இருப்பினும், கடைசி நேரத்தில், அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு குவைத்தில் மேலும் சில ஆண்டுகள் வேலை செய்ய முடிவு செய்தார். அவர் மே 16 அன்று விமானம் மூலம் நாடு திரும்பினார்.

கடந்த 30 ஆண்டுகளாக குவைத்தில் வேலை பார்த்த  61 வயதான பி.எம்.முரளீதரன், இனி குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

NBTC இல் அவர் மேற்பார்வையாளராக இருந்தார், அவரை மேலும் ஒரு வருடம் வேலை செய்யச் சொன்னதால், பிப்ரவரியில் மீண்டும் குவைத்துக்குச் சென்றார்.

பாதிக்கப்பட்டவர்களில், வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்கிய இளம் தொழிலாளர்களும் அடங்குவர்.

கண்ணூர் தர்மடத்தைச் சேர்ந்த 35 வயதான விஸ்வாஸ் கிருஷ்ணன், ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் குவைத் சென்றார். அது அவருடைய முதல் பயணம். வளைகுடாவுக்குச் செல்ல முடிவு செய்வதற்கு முன்பு கிருஷ்ணன், பெங்களூரில் டிராஃப்ட்ஸ்மேன் ஆக பணிபுரிந்தார். அவருக்கு பூஜா என்ற மனைவியும், மூன்று வயது மகனும் உள்ளனர்.

ஆலப்புழாவில் உள்ள பாண்டநாட்டைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் (53), அவரது மருமகன் ஷிபு வர்கீஸ் (38) ஆகியோரும் இந்த  தீ விபத்தில் உயிரிழந்தனர். மேத்யூ கடந்த 30 ஆண்டுகளாகவும், ஷிபு கடந்த 10 ஆண்டுகளாகவும் குவைத்தில் உள்ளனர், இருவரும் NBTC இல் பணிபுரிந்தனர்.

தாயகம் திரும்பிய மேத்யூவின் மூத்த மகள் மேகா, நர்சிங் பட்டதாரி, குவைத்தில் தனது வேலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தார்.

கோட்டயத்தில் உள்ள பாம்பாடியை சேர்ந்த ஸ்டீபின் ஆபிரகாம் (29) திரும்பி வந்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக குவைத்தில் இருந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு, புதிய வீடு கட்டும் பணிக்காக விடுப்பில் வீடு திரும்பினார்.

அவர் மீண்டும் அக்டோபரில் வீடு கிரக பிரவேசத்துக்காகவும், ணப்பெண் தேடுவதற்காகவும் வரவிருந்தார்.

மூன்று வயது சிறுமியின் தந்தை ஷிபு வர்கீஸ் (38) என்பவரும் தீயில் சிக்கி உயிரிழந்தார். ஷிபு மனைவி மற்றும் மகளை பார்க்க தினமும் இரவு வீட்டிற்கு வீடியோ கால் செய்வார். கோட்டயத்தில் செவிலியராகப் பணிபுரியும் இவரது மனைவி ரோசி, புதன்கிழமை இரவு அவர் அழைக்காததால் கவலையடைந்தார். வியாழக்கிழமை, அவர் தனது கணவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை அவரால் நம்பமுடியவில்லை.

 Read in English: Many who perished in Kuwait fire were close to winding up their stay abroad

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment