சத்தீஸ்கரின் சுக்மா மற்றும் தண்டேவாடா மாவட்ட எல்லையில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற தாக்குதலில் 16 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சி.பி.ஆர்.எஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சுக்மாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 16 Maoists killed, 1 CRPF personnel and 2 DRG jawans injured in encounter in Chhattisgarh’s Sukma
இந்த தாக்குதலில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையையும் சேர்த்து, நடப்பு ஆண்டில் இதுவரை 132 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு துறை வட்டாரத்தின் படி, மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று காலை 8 மணிக்கு தாக்குதல் தொடங்கியதாக தெரிகிறது. இதன்படி, 16 மாவோயிஸ்டுகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தானியங்கி ஆயுதங்களான ஏ.கே 47, செல்ஃப் லோடிங் ரைஃபிள்கள், ஐ.என்.எஸ்.ஏ.எஸ் ரைஃபிள், ஏ.303 ரைஃபிள், ராக்கேட் லாஞ்சர், பரெல் க்ரேனெட் லாஞ்சர் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை இந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட ரிசர்வ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கூட்டாக சேர்ந்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பிஜப்பூர் மற்றும் சுக்மா ஆகிய இரண்டும் மாநிலத்தில் அதிகமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு மற்றும் அவர்களின் ஆயுதப்படையான பீப்பிள்ஸ் லிபரேஷன் கொரில்லா ஆர்மி ஆகியவை சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.