Advertisment

தெலங்கானாவில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை; 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

தெலங்கானா காவல்துறையின் உயரடுக்கு நக்சல் எதிர்ப்புப் படையான கிரேஹவுண்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே தெலங்கானா மாநிலம், ஏக்ஷ்துர்நகரம் மண்டலத்தின் சல்பாகா வனப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

author-image
WebDesk
New Update
Maoist encounter

நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு வெளியேறியபோது பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குள் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு ரூ. 20 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட சட்டவிரோதக் குழுவின் முக்கிய தலைவர் உட்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Seven Maoists killed in gunfight with police in Telangana

கொல்லப்பட்டவர்களில் குர்சம் மங்கு என்ற பத்ரு, தெலங்கானா மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) பகுதியின் யெல்லாண்டு - நர்சம்பேட் பகுதிக் குழு செயலாளரும், ஒரு பெண் போராளி உள்பட கொல்லப்பட்ட 7 மாவோயிஸ்டுகளில் 6 பேர் சத்தீஸ்கர் பூர்வீக மக்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தெலங்கானா காவல்துறையின் உயரடுக்கு நக்சல் எதிர்ப்புப் படையான கிரேஹவுண்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டுகள் சம்பந்தப்பட்ட ஏதுர்நகரம் மண்டலத்தின் சல்பாகா வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.

Advertisment
Advertisement

"ஒரு முக்கிய தலைவர் உட்பட 7 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்” என்று முலுகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷபரீஷ் பி பி.டி.ஐ-யிடம் கூறினார், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் இரண்டு ஏகே -47 துப்பாக்கிகள் அடங்கும்.

ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்கள் சரணடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் காவல் துறையினரை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். போலீசாரும் தற்காப்புக்காக திருப்பி சுட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
என்கவுண்டருக்குப் பிறகு, போலீசார் 7 சடலங்களைக் கண்டுபிடித்தனர், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தெரிவித்தனர்.

கடந்த மாதம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலீஸ் இன்பார்மர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

கூடுதல் டி.ஜி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஷ் எம். பகவத், இந்த நடவடிக்கைக்காக போலீஸ் குழுக்களை பாராட்டினார், மீதமுள்ள மாவோயிஸ்ட் போராளிகளை மைய நீரோட்டத்தில் சேர வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Telangana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment