Maratha Reservation : மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறார்கள். இந்நிலையில் இன்று மகாராஷ்ட்ரா மாநில சட்ட மன்றத்தில் 16% இட ஒதுக்கீட்டினை கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Maratha Reservation
மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூகம், மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குழு ஒன்றை நியமித்தது. அந்த குழு தங்களின் களப் பணியை முடித்துவிட்டு அந்த அறிக்கையை அம்மாநில தலைமை செயலாளரிடம் அளித்தது.
இன்று அந்த தீர்மானம், மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவினை அளித்தனர். இந்த தீர்மானத்தினை மராத்தா இனத்தவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இதே போல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் தங்கர் சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு தருவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, மராத்திய மன்னர் சிவாஜி சிலையின் முன்பு, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சில அமைச்சர்கள் நின்று மரியாதை செலுத்தினார்கள்.