Ex-union minister Margaret Alva is Opposition’s vice presidential candidate: அடுத்த மாதம் நடைபெற உள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரும், கவர்னருமான மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவை அறிவித்த சரத் பவார், மார்கரெட் ஆல்வாவின் பெயரை 17 எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்கள்: கலாச்சார அமைச்சக இதழ் சாவர்க்கருக்கு சமர்ப்பணம்; ‘வரலாற்றில் அவருடைய இடம் காந்திக்கு குறைந்தது இல்லை’
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினரான மார்கரெட் ஆல்வா, மத்திய அமைச்சராகவும், கோவா கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி 4:30 மணி வரை நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு; சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்; இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா; இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினோய் விஸ்வம்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ; டி.ஆர்.எஸ் உறுப்பினர் கேசவ் ராவ்; சமாஜ்வாதி கட்சி தலைவர் பேராசிரியர் ராம் கோபால் யாதவ்; சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி; IUML உறுப்பினர் ET முகமது பஷீர்; மற்றும் ஆர்.ஜே.டி.,யின் அமரேந்திர தரி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும், ராஜ்யசபாவில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சனிக்கிழமையன்று, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19 கடைசி நாள்.
துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இது நாட்டின் 16வது துணை ஜனாதிபதி தேர்தலாகும்.
அரசியலமைப்பின் 66வது பிரிவின்படி, மக்களவை மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்) கொண்ட ஒரு தேர்தல் கல்லூரியால் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜூன் 21 அன்று, எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை தங்கள் வேட்பாளராக ஜூலை 18 அன்று அறிவித்தன. அதன் பிறகுதான், ஜனாதிபதித் தேர்தலுக்கான NDA வேட்பாளராக பா.ஜ.க திரௌபதி முர்முவை அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil