/tamil-ie/media/media_files/uploads/2023/05/PTI05_13_2023_000132A.jpg)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கூறுகையில், “கர்நாடகாவில் வெறுப்பின் சந்தைகள் மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், “கர்நாடகா தேர்தலில் நாங்கள் அன்புடன் போட்டியிட்டோம், வெறுப்புடன் அல்ல,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, "இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும்" என்று மேலும் கூறிய ராகுல் காந்தி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை சுட்டிக் காட்டினார்.
#WATCH | "Karnataka mein Nafrat ki bazaar band hui hai, Mohabbat ki dukaan khuli hai": Congress leader Rahul Gandhi on party's thumping victory in #KarnatakaPollspic.twitter.com/LpkspF1sAz
— ANI (@ANI) May 13, 2023
புது டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “கர்நாடக மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிளவுபடுத்தும் போரில் தான் ஈடுபடவில்லை. முதலாளித்துவம் மக்கள் அதிகாரத்தால் தோற்கடிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அறுதிப் பெறும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. அங்கே பின்தங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.