26/11 மும்பை தாக்குதல்:
மும்பையின் கறுப்பு நாள் என அழைக்கப்படும் 26/11 மும்பை தாக்குதல் நடைப்பெற்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுகள் உருடோண்டியும் அது கொண்டு சென்ற இழப்புகள் ஆறாத ரணங்களாய் இன்றும் இருந்து வருகின்றன. இந்த தாக்குதலில் தங்களது குடும்பங்களை இழந்தவர்கள் அந்த நாளை எண்ணி எண்ணி ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் துயரத்துடன் பங்குக்கொள்ளும் விதமாகவு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று மாலை சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் பியூஸ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
மும்பையில் 26/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்து அதைக் குறித்து விரிவான உருக்கமான உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் stories of strength என்ற பக்கத்தின் மூலம் எடுத்துரைக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரபல நிறுவனமான மாருதி சுசூகி உடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை வழி நடத்துக்கிறது.மும்பை தாக்குதல் கடந்த 2016 ஆம் ஆண்டு அரங்கேறிய சமயத்தில் ஒவ்வொரு நிகழ்வையும் நொடி பொழுதில் மக்களிடம் கொண்டு சேர்த்தது. தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது.
இந்த சிறப்பு நிகழ்ச்ச்சிகள் கலந்துக் கொள்ள பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கைத்துறை என்பது மக்களுக்கு எந்த நேரத்தில் கைக்கொடுக்க வேண்டியது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இயக்குனர் அனந்த் கோயங்கா ஒருமுறை கூறியது, “வன்முறைக்கு எதிரானது பத்திரிக்கை என்பது சிறிதளவும் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
இந்நிலையில், மும்பையில் தீவிரவாதிகளால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை மக்களுடன் சேர்ந்து, அவர்களின் துக்கத்தில் கலந்துக் கொண்டு இந்த நாளை நினைவூட்டி, இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்துகிறது.
இந்த நிகழ்வு குறித்து இந்திய எக்ஸ்பிரஸ் அசோசியேட்டட் எடிட்டர் கவிதா ஐயர் பதிப்பிக்கப்பட்ட புத்தகம், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்ட 26/11 நிகழ்வின் உண்மை நிலவரத்தை குறித்து பேசுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயிர் பிழைத்தவர்கள் தனிப்பட்ட வரலாறு மற்றும் போராட்டங்களின் கணக்குகளையும்,அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தொகுப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 'இந்தியாவின் ஆயிரம் வருட பாரம்பரியம் அகிம்சை சகிப்புத்தன்மை மற்றும் மெய்யியல் ஆகியவை இன்றைய உலகில் மிகவும் அவசியம்” என்ற வாசகத்துடன் இது தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய மற்றொரு இணை இயக்குனரான அன்கி தாஸ் "10 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய கொடூரமான தாக்குதலில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவில் கொள்வது அவசியம். இன்று பயங்கரவாதம், தைரியம் மற்றும் வலிமை காட்டியவர்கள் பற்றி. உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பிரியமானவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவும், அவர்களின் சோகத்தில் பங்குக்கொள்ளவும் இந்த சிறப்பு நிகழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/higher-education-26.jpg)
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள்:
அமிதாப் பச்சன், ஜாவேத் அக்தர், கௌஷிகி சக்ரவர்த்தி, ராகேஷ் சௌராசியா, மயூரி உபாத்யா, மெர்லின் டி சூசா, ஹர்ஷ்தீப் கவுர், நீதி மோகன், ராகுல் டெஸ் பாண்டே, மகேஷ் காலே, ஜாவேத் அலி, அனி சோயிங் டிரோல்மா, ஷிம்ம மஹாதேவன்/.
இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் பெருமிதம் கொள்கிறது. 26.11 மும்பையின் கறுப்பு நா. வரலாற்றில் மறையாத நாள். இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற எத்தனையோர் காவலர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டிஜிட்டல் நியூஸ் குழு - ஏபிபி நியூஸ், ரிப்பளிக் டிவி மற்றும் 92.7 எஃப்எம், இந்தியாவின் No.1 பிரீமியம் ஹிந்தி பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிப்பரப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள், ஏ.ஆர்.பி. நியூஸ், ரிப்பளிக் டி.வி., வோடபோன், சென்ட்ரம் பவுண்டேஷன், தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல், எல்.ஐ.சி., ஏர் இந்தியா, லக்ஷ்யா, மும்பை போர்ட் டிரஸ்ட், பிரைமிகல் ஃபோகஸ், ஏர் இந்தியா.
>