லிவ்-இன் உறவுகளுக்கு திருமணப் பதிவு, ஆதார் கட்டாயம்; உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட வரைவு விதிகள்

உத்தரகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட வரைவு விதிகள்; லிவ்-இன் உறவுகளுக்கு திருமணம் போன்ற பதிவு, அனைத்து பதிவுகளுக்கும் ஆதார் கட்டாயம்

உத்தரகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட வரைவு விதிகள்; லிவ்-இன் உறவுகளுக்கு திருமணம் போன்ற பதிவு, அனைத்து பதிவுகளுக்கும் ஆதார் கட்டாயம்

author-image
WebDesk
New Update
live in relationship

பிரதிநிதித்துவ படம்

Aiswarya Raj

அனைத்து லிவ்-இன் உறவுகளுக்கும் திருமணம் போன்ற பதிவு, சாட்சிய வாரிசு வழக்குகளில் சாட்சிகளின் கட்டாய வீடியோ பதிவுகள் மற்றும் அனைத்து பதிவுகளிலும் புகைப்படங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் - இவை ஜனவரி 26 அன்று அமல்படுத்தப்பட உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்டத்தின் (UCC) கீழ் கட்டாயத் தேவைகளில் ஒன்றாகும். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Exclusive: Marriage-like registration for live-in, Aadhaar mandatory – the new UCC rules in Uttarakhand

திங்களன்று, உத்தரகாண்ட் அரசாங்கம் அதன் அதிகாரிகளுக்கு பொது சிவில் சட்டம் போர்ட்டலைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் வகையில் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் டெஹ்ராடூனின் தோய்வாலா பிளாக் ஆபீஸில் இது போன்ற ஒரு அமர்வில் கலந்துக் கொண்டது.

மூன்று மண்டல துணை மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் 14 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த பயிற்சி ஜனவரி 20 அன்று முடிவடைகிறது. பொது சிவில் சட்ட போர்ட்டலில் மூன்று பங்குதாரர்கள் உள்நுழைவதற்கான விருப்பங்கள் உள்ளன, அவை குடிமக்கள், சேவை மைய ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள். பதிவு செய்வதற்கு ஆதார் விவரங்கள் தேவை.

Advertisment
Advertisements

போர்ட்டல் வழங்கும் சேவைகளின் பட்டியலில் திருமணம், விவாகரத்து மற்றும் லிவ்-இன் பதிவுகள், லிவ்-இன் உறவுகளை நிறுத்துதல், குடும்ப வாரிசுகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளின் அறிவிப்பு, சாசன வாரிசுகள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட வழக்குகளில் மேல்முறையீடு, தகவல் அணுகல், மற்றும் புகார் பதிவு ஆகியவை உள்ளன.

மூன்றாவது நபர் திருமணம் அல்லது லிவ்-இன் உறவை ஆட்சேபிக்கும்போது புகார் மூலம் அவ்வாறு செய்யலாம். தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு, ஒரு துணைப் பதிவாளர் புகார்களைச் சரிபார்ப்பதில் பணிபுரிகிறார்.

"புகார் எழுப்பும் குடிமகன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும், எனவே இது தவறான தகவல்களைக் களைய உதவும்" என்று பயிற்சியாளர் முகேஷ் கூறினார்.

லிவ்-இன் ஜோடிகளுக்கு, அதாவது ஏற்கனவே உள்ள மற்றும் புதிய ஜோடிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் இணையர்களின் பெயர்கள், வயது, தேசியம், மதம், முந்தைய உறவு நிலை மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை போர்ட்டலில் உள்ளிட வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில், இது திருமணப் பதிவின் அதே சரிபார்ப்புப் பட்டியல் ஆகும்.

லிவ்-இன் உறவுகளுக்கு இரண்டு வகையான பதிவுகள் உள்ளன - ஒன்று உத்தரகாண்டில் வசிக்கும் இணையர்களுக்கு மற்றும் மற்றொன்று பிரதேசத்திற்கு வெளியே ஆனால் இந்தியாவிற்குள் இருக்கும் மாநிலத்தின் பூர்வீகவாசிகளுக்கு. இணையர்கள் தங்கள் புகைப்படங்களையும் அறிவிப்பையும் போர்ட்டலில் பதிவேற்றம் செய்வது அவசியமாகிறது. அத்தகைய உறவுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

சாட்சிய வாரிசுக்கு, அறிவிப்பாளர் விவரங்கள் மற்றும் ஆதார் தகவல்களை, அதாவது அவருடைய மற்றும் வாரிசுகள் மற்றும் சாட்சிகள் ஆகிய இருவரின் விவரங்களையும் அளிக்க வேண்டும். கூடுதலாக, இரண்டு சாட்சிகள் வாரிசு அறிவிப்பைப் படிக்கும் பதிவைப் பதிவேற்ற வேண்டும் என்றும் விதிகள் கூறுகின்றன.

மூன்று மாநில அளவிலான உதவி மையங்களையும் அரசு அமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் அதே வேளையில், பொது சேவை மையம் பயிற்சிக்கு உதவும் மற்றும் வழக்குத் துறை சட்ட உதவியை வழங்கும்.

"பயிற்சியாளர்களின் கருத்து அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படும், எனவே வரைவு விதிகள் மாற்றியமைக்கப்படும்" என்று முகேஷ் கூறினார்.

Uttarakhand

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: