கொரோனா பாதிப்பால் சீதாராம் எச்சூரி மகன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

India News in Tamil : இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலவரம், நாட்டு மக்களை விழிப் பிதுங்க வைத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி இன்று காலை உயிரிழந்தார்.

35 வயதான ஆஷிஷ் யெச்சூரிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட, கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின், டெல்லியில் உள்ள குருகிராமை அடுத்த மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி, தனது மூத்த மகனின் மறைவு குறித்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘கொரோனா தொற்றால் எனது மூத்த மகனை இழந்து விட்டேன் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, என் மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளரகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனாவால் உயிரிழந்த செய்தியை வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறோம். யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவுச் செய்தியை அறிந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ‘ஒரு பெற்றோர் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பை யெச்சூரி அடைந்துள்ளார். அவரின் இந்த கடினமான நேரத்தில் நான் அவருடன் துணை நிற்கிறேன்’, என ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், ‘ஆஷிஷ் யெச்சூரியின் மறைவு, வருத்தத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் யெச்சூரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஷிஷ் யெச்சூரியின் மறைவுக்கு, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, யெச்சூரியின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் மனவேதனையையும் அளிக்கிறது. இந்த தருணத்தில், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஷிஷ் யெச்சூரியின் மறைவை அடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், கனடா கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Marxist communist party seceretary sitaram yechury son ashish dies of covid leaders condolence message

Next Story
நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வாயு கசிவு; 22 நோயாளிகள் உயிரிழப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com