குஜராத் மாநிலம், வதோதரா, நந்தேசரியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 1000 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பென்சீன் சேமிப்பு தொட்டியில் திங்கள்கிழமை மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Massive fire breaks out at Gujarat oil refinery
இயற்கையான கச்சா எண்ணெய் பொருட்கள், பென்சீன் என்ற நிறமற்ற மற்றும் அதிக எரியக்கூடிய மற்றும் ஆவியாகும் திரவமாகும். அதன் ஆவியாகும் திறன் காற்றை விட கனமானது மற்றும் தாழ்வான பகுதிகள் மற்றும் மோசமான காற்றோட்டம் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேகரிக்க முடியும்.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் அறிக்கையின்படி, பிற்பகல் 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால், தீ விபத்துக்கானஅதன் காரணம் அல்லது காயமடைந்த அல்லது சிக்கிய ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுத்திகரிப்பு நிலையத்தின் அவசரகால மீட்புக் குழு, தற்போது தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலைமையை தீவிரமாகச் சமாளித்து வருகிறது. தீயை அணைக்க அருகில் உள்ள தண்ணீர் தெளிப்பான் அமைப்பு செயல்படுத்தப்பட்டு, அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை”. என்று தெரிவித்துள்ளது.
நவம்பர் 11, 2024 திங்கட்கிழமை, வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். (PTI புகைப்படம்)
வதோதரா காவல்துறை மாலை 5.30 மணி வரை உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஆம்புலன்ஸ்கள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விரைந்து வருவதைக் காண முடிந்தது. இந்தியன் ஆஇயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், "ஆபத்தான நிலையில் இருந்திருக்கக்கூடிய" ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.” தெரிவித்தனர்.
ஐஓசிஎல் அறிக்கை மேலும் கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு எங்களின் அதிகபட்ச முன்னுரிமையாக உள்ளது. சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் இயல்பானவை. நிலைமை முன்னேற்றம் அடையும்போது விவரங்கள் தெரிவிக்கப்படும்." என்று தெரிவித்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழில் பேரிடர் மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையில், சுற்றுவட்டார சாலைகளில் திரண்டிருந்த கூட்டத்தை கலைக்க போக்குவரத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் அமி ராவத், தீ விபத்து "நகருக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும்" என்று கூறி மாவட்ட ஆட்சியர் ஒரு பெரிய அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“