கேரளா கனமழை : இடுக்கி நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தேயிலை தோட்டப் பணியாளர்கள் 20 குடும்பங்களாக பெட்டிமுடி மலைச்சிகரத்தில் வாழ்ந்து வந்தனர்

By: Updated: August 8, 2020, 10:23:06 AM

Massive landslide in kerala 5 dead : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. நான்கு நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக உதகையின் எமெரெல்ட், அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.

ஆனமலை புலிகள் காப்பகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் பல்வேறு அணைகள் விரைவாக நிரம்பி வருகிறது. சோலையாறு, மேல் ஆழியாறு, ஆழியாறு, அப்பர் பவானிசாகர் அணைகள் நிரம்பி வருகிறது. கேரளாவின் மலைப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருதால் அங்கும் அணைகள் நிரம்பி வருகிறது.

மூணாறு நிலச்சரிவு

கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மொத்தம் 80 நபர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்பு துறையினர் தற்போது அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Massive landslide in kerala 5 dead southwest monsoon lashing out in western ghats

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X