Advertisment

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக மம்தா பானர்ஜி? - பிரத்ய பாசு ஆலோசனை

கேரள ஆளுநர் குறிப்பிட்ட காலத்துக்கு மாநில முதலமைச்சரை வேந்தராக செயல்படும் படி கேட்டுக்கொண்டார் அதுபோன்ற வாய்ப்பு இருக்குமா என்று பரிசீலித்து வருகிறோம்"

author-image
WebDesk
New Update
மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக மம்தா பானர்ஜி? - பிரத்ய பாசு ஆலோசனை

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அந்த கூட்டத்திற்கு எந்த துணைவேந்தரும் வராதது வேதனையளிப்பதாக ஆளுநர் வருத்தம் தெரிவித்த ஒரிரு மணி நேரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மாநில முதலமைச்சரை வேந்தராக நியமிப்பதற்கு சட்டபூர்வமாக வழிமுறை உள்ளதா என்று மேற்கு வங்க அரசு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பிரத்ய பாசு தெரிவித்துள்ளார்.

Advertisment

பாசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில அரசுடன் ஆளுநர் ஒத்துழைப்பதில்லை எதற்கெடுத்தாலும் விரோதம் தான் பாராட்டுகிறார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் தேங்கிக் கிடக்கின்றன. ஆளுநர் கொஞ்சம்கூட ஒத்துழைப்பது இல்லை.

அதன் காரணமாக, கேரள ஆளுநர் குறிப்பிட்ட காலத்துக்கு மாநில முதலமைச்சரை வேந்தராக செயல்படும் படி கேட்டுக்கொண்டார் அதுபோன்ற வாய்ப்பு இருக்குமா என்று பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஆளுநரின் பணி ட்வீட் செய்வது,சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பது கிடையாது. ஆளுநர் தனது வேலையை மறந்துவிட்டார். ட்வீட் அனுப்புவதில் மும்முரமாக இருக்கிறார். இதற்கு முன் எந்த மாநில கவர்னரும் இப்படி நடந்து கொண்டது கிடையாது" என்றார்.

முன்னதாக இம்மாத தொடகத்தில், நடைமுறைகளை மீறி விஷயங்களைச் செய்ய தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி, பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும், முதலமைச்சரே அந்த பொறுப்பை கவனிக்கலாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், ஆளுநரின் கூட்டத்திற்கு துணை வேந்தர்கள் வராதது குறித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.

அதில், ஆளுரை சந்திக்க தனியார் பல்கலைக்கழகங்களின் தலைவர் அல்லது துணைவேந்தர்கள் என யாரும் வரவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சங்கம் அமைத்து செயல்படுகிறார்கள் என்று காலியாக இருக்கும் மேஜைகளின் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.

மேலும் பதிவிட்ட அவர், "ஜனவரி 20 இல் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் எழுச்சி போராட்டம் நடைபெற்றது. தற்போது, பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய அங்கீகாரம் இல்லாமல் சட்டத்தை மீறி துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, சட்டபூர்வமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளோம் தனியார் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள், 11 பேர், மாநில ஆளுநராக இருக்கும் பார்வையாளருடனான சந்திப்புக்கு வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மாநில அரசு, வேந்தரைப் புறக்கணித்து துணைவேந்தர்களை நியமித்து வருவதாகவும், இதுபோன்ற முன்னேற்றங்கள் குறித்து வலுவாகப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த நியமனங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார்வையாளர்கள் நேரம் உட்பட தனியார் பல்கலைக்கழகங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து UGC தீவிர விசாரணையில் ஈடுபட வேண்டும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது, அது நாட்டின் சட்டத்தின்படி இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கிடையில் மேற்கு வங்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஆளுமை பதவிக்கு அரசியல் நபர் வந்தால், ஏற்றுக்கொள்ளாப்படாது.

இதேபோல், ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பார்த்த பிரதீம் ராய், “ஆளுநரை பதவியில் இருந்து நீக்கும் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கலாம். ஆனால், அரசியல் பிரமுகர் ஒருவரை பல்கலைக் கழக வேந்தராக நியமிப்பது பேராபத்தாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment