உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அணுகியது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக கூறினார்.
இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கூட்டணி வைத்துக்கொள்வோம். உங்களை முதல்வர் வேட்பாளராக நிறுத்துகிறோம் என மாயாவதிக்கு செய்தி அனுப்பியிருந்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர்கள் கன்ஷி ராம்ஜி போன்றவர்கள். நான் மிகவும் மதிக்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் தலித் குரலை எழுப்ப அவர்கள் ரத்தமும் வியர்வையும் கொடுத்தனர். காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது வேறு விஷயம். ஆனால் இன்று அந்த குரலுக்காக நான் போராட மாட்டேன் என்று மாயாவதி கூறுகிறார்.அவர் களத்தைவிட்டு விலகியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அமைப்புகள் மூலம் மட்டுமே அரசியலமைப்பை செயல்படுத்த முடியும். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றிவிட்டனர். நிறுவனங்கள் நம் கையில் இல்லை என்றால், அரசியலமைப்பும் நம் கையில் இல்லை" என்றார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது, உ.பி.,யின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா, அக்கட்சி தனித்து போட்டியிடும் என பலமுறை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிகாரியும், நெருங்கிய உதவியாளருமான கே.ராஜூவால் தொகுக்கப்பட்ட ‘The Dalit Truth — Battles For Realising Ambedkar’s Vision’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ஒருபோதும் அதிகாரத்தை நாடவில்லை ஆனால் நாடு அன்பையும் மரியாதையையும் பொழிந்ததற்கு நன்றி.ஆனால் நாடு எனக்கு அன்பை மட்டும் கொடுக்கவில்லை, என் மீது காலணிகளை வீசியது. எவ்வளவு கடுமையாகவன்முறையால் தாக்கப்பட்டேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்தேன். எனக்கு விடை கிடைத்தது. நாடு எனக்குக் கற்பிக்க விரும்புகிறது. அது உங்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை, கற்றுக் கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil