பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷ் ஆனந்த் மீண்டும் சேர்க்கப்பட்டார். மக்களவை தேர்தலில், தோல்வி குறித்து லக்னோவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் முதல் ஆய்வுக் கூட்டத்தில் மாயாவதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, "முன்பை விட அவருக்கு (ஆகாஷ்) அதிக மரியாதை கொடுக்க வேண்டும்" என்று கட்சித் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து "கட்சியில் முதிர்ச்சியுடன் பணியாற்ற ஆகாஷ் ஆனந்துக்கு கட்சித் தலைவர் (மாயாவதி) மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார்" என்று பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாயாவதி, அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் பகுஜன் சமாஜ் கட்சியை சேதப்படுத்தியது. அரசியல் சட்டத்தை தேர்தல் பிரச்சினையாக்கிய அதே காங்கிரஸ், “அரசியல் நிர்ணய சபையில் பி.ஆர்.அம்பேத்கர் நுழைவதைத் தடுக்க அனைத்து யுக்திகளையும் கையாண்டது” என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கட்சித் தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் பகுஜன் சமாஜ் அறிக்கையில், “மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முழுமையாக நிலையானதாக இல்லை என்றும், இந்தியா முழுவதும் அமைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்த கட்சித் தலைவர்கள் "விரிவாக உழைக்க வேண்டும்" என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
மாயாவதி தனது மருமகன் ஆகாஷை 2019 இல் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்தார், மேலும் கடந்த ஆண்டு டிசம்பரில் அவரை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார், கடந்த மாதம் அவரை பதவி நீக்கம் செய்தார்.
அப்போது, மே 7 அன்று, பிஎஸ்பி தலைவர் ஆகாஷை நீக்கும் முடிவு "கட்சி மற்றும் இயக்கத்தின் பெரிய நலனுக்காக... அவர் முதிர்ச்சி அடையும் வரை" அமலில் இருக்கும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Mayawati reinstates nephew Akash in top BSP post, again names him successor
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“