scorecardresearch

22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்?

22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை அடங்கிய வாக்காளர் பட்டியல்; மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் யாரை தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்?

22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்?

Manoj C G 

டி.ரித்திக் ரெட்டி இப்போது தான் எம்.பி.பி.எஸ் முடித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள விகாராபாத்தைச் சேர்ந்த 22 வயதான ரித்திக், அக்டோபர் 17 ஆம் தேதி அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 9,850க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) பிரதிநிதிகளில் இளையவர். முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகனான ரித்திக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையேயான போட்டியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்.

தமிழகத்தின் விழுப்புரத்தில் அடுத்த மாதம் 24 வயதை எட்டும் வினோத் குமாரும் சம அளவில் பரவசம் அடைந்துள்ளார். எம்.ஏ, வரலாறு படித்த வினோத் குமாரின் அரசியல் பயணம், அவர் இளங்கலை பட்டதாரியாக இருந்தபோது மாணவர் ஆர்வலராக தொடங்கியது. அவர் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையின் போது 1,295 உறுப்பினர்களைச் சேர்த்ததால் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதி ஆனார். தற்செயலாக, விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ், மாநிலத்திலேயே அதிகபட்சமாக 4,736 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இங்கு புல்டோசர் அரசியல் பாஜகவுக்கு உதவாது.. உயர் மட்டத்துக்கு புத்தி சொல்லும் ம.பி. தலைவர்கள்

ரித்திக்கின் பள்ளி நண்பன், 23 வயதான சாய் ரெட்டியும் ஒரு பிரதிநிதி. மூன்று முறை எம்.எல்.ஏ மற்றும் இரண்டு முறை எம்.எல்.சி.,யாக இருந்த அவரது தாத்தா சித்தம் நர்சி ரெட்டி மற்றும் அவரது தந்தை சி வெங்கடேஷ்வர் ரெட்டி ஆகியோர் 2005 இல் நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். எம்.பி.ஏ முடித்த பிறகு, சாய் ரெட்டி தனது குடும்பத்தின் கட்டுமானத் தொழிலைக் கைப்பற்றினார். அவர் 2018 இல் காங்கிரஸில் சேர்ந்தார், இப்போது தெலுங்கானாவின் நாராயண்பேட் தொகுதியில் இருந்து ஒரு பிரதிநிதியாக உள்ளார், அங்கு அவரது குடும்பம் உள்ளூர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ரித்திக், வினோத் மற்றும் சாய் ஆகியோர் தங்களின் முதல் வாய்ப்பில் உற்சாகமாக இருக்கும்போது, ​​கர்நாடக முன்னாள் சபாநாயகர் கோகோடு திம்மப்பா கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இரண்டு போட்டிகளைக் கண்டார். 1996 இல், மூத்த தலைவர்களான ஷரத் பவார் மற்றும் ராஜேஷ் பைலட் ஆகியோர் சீதாராம் கேஸ்ரிக்கு சவால் விடுத்தனர்; மற்றும் 2000 ஆம் ஆண்டில், சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். 90 வயதான திம்மப்பா பிரதிநிதிகளில் மூத்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு வாரங்களே மூத்தவர்.

மாநிலங்கள் முழுவதும் உள்ள 67 சாவடிகளிலும் டெல்லியில் உள்ள AICC தலைமையகத்திலும் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூரை தேர்வு செய்ய வாக்களிக்கும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்தது. பிரதிநிதிகளின் தொடர்பு விவரங்கள் அடங்கிய பட்டியல், மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தால் இரு வேட்பாளர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த பிரதிநிதிகளில், 30 சதவீதம் பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள், 46 சதவீதம் பேர் 45 முதல் 65 வயது வரை, 24 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். தேர்தல் அரசியலைப் போலவே, ஆண்களின் எண்ணிக்கை 3:1 என்ற விகிதத்தில் பெண்களை விட அதிகமாக உள்ளது. மொத்த பிரதிநிதிகளில் எழுபத்தி இரண்டு சதவீதம் பேர் ஆண்கள்.

1,100-க்கும் அதிகமான பிரதிநிதிகளுடன், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச பிரதிநிதிகள் உள்ளனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (மாநில காங்கிரஸ் குழுவைக் கொண்டுள்ள மும்பையுடன் இணைந்து), மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக பிரதிநிதிகள் உள்ளனர்.

மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் 800 பிரதிநிதிகள் உள்ளனர், மேற்கு வங்கத்தில் 740, தமிழ்நாடு 700, பீகார் 600 மற்றும் மத்தியப் பிரதேசம் 500 பிரதிநிதிகள் உள்ளனர்.

தொகுதி குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. தோராயமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிக் குழுக்கள் உள்ளன. இந்தியாவில் 4,100 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சில மாநிலங்களில், ஒரு சட்டமன்றத் தொகுதியில் கட்சிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக் குழுவும் தலா ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்கிறது/ தேர்ந்தெடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், ஒரு தொகுதிக் குழுவிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்/தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் என பதவியில் உள்ள உறுப்பினர்கள் உள்ளனர். எம்.பி.க்களில் சிலர் தொகுதிக் குழுக்களில் இருந்தும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ராகுல் காந்தி அமேதியில் உள்ள தொகுதிக் குழுவின் பிரதிநிதி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரதிநிதியாக உள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொகுதிக் குழு வாக்குச் சாவடியின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்/தலைவரை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கிறது. உதாரணமாக, ரித்திக், முன்னாள் எம்.எல்.ஏ.வும், விகாராபாத் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.ராம்மோகன் ரெட்டியின் மகன். அவரது குடும்பம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைத் தவிர, பிரதிநிதிகள் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலுக்கான கோரிக்கை இல்லாவிட்டால், காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணையத்தால் (CEA) எதுவும் செய்ய முடியாது என்று மிஸ்திரி கூறினார். CEA இன் வாதம் என்னவென்றால், தொகுதிக் குழுவின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்து மூலம் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தால், CEA ஒரு தேர்தலை வலியுறுத்த முடியாது. தேவை ஏற்பட்டால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்று மிஸ்திரி கூறினார்.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், நிறுவனத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்கம், இம்முறை ஓரளவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. மேலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பவர்கள் பிரதிநிதியாக வருவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. 6 கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததாக காங்கிரஸ் கூறுகிறது, அதில் 2.6 கோடி பேர் டிஜிட்டல் இயக்கம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியை தொடர்பு கொண்டபோது, ​​“ஊடக வர்ணனையாளர்கள் உள்கட்சி ஜனநாயகம் போன்ற பெரிய சொற்றொடர்களை பயன்படுத்துகின்றனர். மிகச் சிலரே இதை அடையத் தேவைப்படும் கடினமான செயல்முறையை உண்மையிலேயே புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். தொகுதி மட்டத்திலிருந்து வாக்காளர் பட்டியலை உருவாக்கும் அரசியலமைப்பு முறையை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. தலைவர் தேர்தலுக்கான இந்த நிலைக்கு வருவதற்கு, ஒவ்வொரு வாக்காளருக்கும் QR குறியீட்டு அடையாள அட்டையுடன் முறையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு, CEA தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் ஒன்பது மாத கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு ஆரோக்கியமான பிரச்சாரம் உள்ளது மற்றும் கட்சித் தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள் மற்றும் ஈர்க்கப்படுகிறார்கள், இது முதல் முறையாகும். இது கட்சித் தரப்புக்கும், அணிக்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது. ராகுல் காந்தி நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வருகிறார்,” என்று கூறினார்.

வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இருவரும் பிரதிநிதிகளை அணுகி வருகின்றனர். தெலுங்கானாவில் உள்ள பார்கி தொகுதிக் குழுவின் பிரதிநிதியான ரித்திக், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்றார். “நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இருவரும் உண்மையிலேயே தகுதியான வேட்பாளர்கள். இது ஒரு கடினமான தேர்வு. ஆனால் யார் வெற்றி பெறுகிறார்களோ… அவர்கள் சிறந்ததைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இரண்டு பிரச்சாரக் குழுக்களிடமிருந்தும் தனக்கு ஒன்றிரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார்.

“நான் உண்மையில் பாக்கியமாக உணர்கிறேன்… அதிர்ஷ்டசாலி. இது முதல் முறை அனுபவம். அதில் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் சாய். மேலும், “கார்கேஜி பரந்த அனுபவமுள்ள ஒரு பெரிய தலைவர். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாகவும், இரண்டு முறை லோக்சபா எம்.பி.,யாகவும், தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாகவும் உள்ளார். அவர் ஒரு சிறந்த தலைவர். சசி தரூர் ஒரு அறிவுஜீவி. அவர் பேசும் விதம், இளைஞர்களை ஊக்குவிக்கிறது…அவர்களில் பெரும்பாலோர் அவரைப் பின்பற்றுகிறார்கள். அவர் தனது சொந்த பிராண்ட் வைத்திருக்கிறார். எனவே இது கடினமான தேர்வு,” என்றும் சாய் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mbbs graduate 22 to ex karnataka speaker 90 pcc delegates who will elect congress chief