Advertisment

பாராளுமன்றத்தில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்ட ஊடகத்தினர்: ஜனநாயகத்தின் மோசமான நிலை-தலைவர்கள் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் சேர்ந்து ஊடகங்களின் "கூண்டு" பற்றி கேள்வி எழுப்பினார். அவர் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்களும் அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க கண்ணாடி அறைக்குள் சென்றனர்.

author-image
WebDesk
New Update
parliament media

Told to clear entry area, media has a new address in Parliament: Glass enclosure

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இடங்களுக்கு ஊடகத்தினர் செல்வது ஏற்கனவே மிகவும் தடை செய்யப்பட்ட நிலையில், மின்னணு ஊடகங்கள் திங்கள்கிழமை வளாகத்தில் உள்ள ஒரு கண்ணாடி அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
உள்ளே அல்லது வெளியே வரும் எம்.பி.க்களை ஊடகத்தினர் இங்கு வைத்து பேட்டி எடுப்பது வழக்கம்..
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் சேர்ந்து ஊடகங்களின் "கூண்டு" பற்றி கேள்வி எழுப்பினார். அவர் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்களும் அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க கண்ணாடி அறைக்குள் சென்றனர்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், சார், கூண்டில் அடைக்கப்பட்ட ஊடகங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றார். 
இதற்கு பதிலளித்த பிர்லா, இதுபோன்ற பிரச்சினைகள் தம்முடன் நேரில் விவாதிக்க வேண்டும், அவையில் அல்ல, மேலும் பாராளுமன்றத்தின் நடைமுறை விதிகள் பற்றி காந்தி தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். 
பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தனித்தனியாக சந்தித்த பிர்லா, அவர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
"இன்று, தலைவர்களிடமிருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்கள் அங்கேயே (அடைப்புக்குள்) இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், ஏனெனில் அவர்களில் பலர் படிகளிலும் நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூட்டமாக இருப்பார்கள், இதனால் நடந்து செல்வது கடினமாக உள்ளது என்று பல எம்.பி.க்கள் புகார் கூறினர்,” என்று ஒரு ஆதாரம் கூறியது.
பிரதமர் அலுவலகம் மற்றும் சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரின் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர, எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பிரதான வாயிலுக்கு முன் உள்ள பகுதி மட்டுமே சுற்றி வளைக்கப்பட்டுள்ளது, என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோருடன் இணைந்து பத்திரிகையாளர்களை  கண்ணாடி அறைக்குள் சென்று சந்தித்தார், 
இது ஒரு சென்சார்ஷிப் நடவடிக்கை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், என்று ஓ பிரையன் கூறினார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள ராஜ்யசபா எம்.பி. மனோஜ் ஜா, ஊடக வளாகத்திற்கு அருகில் நிற்பது போன்ற ஒரு படத்தைப் பதிவிட்டு, இது "ஜனநாயகத்தின் மோசமான நிலையை" பிரதிபலிப்பதாகக் கூறினார். 
ஊடக நண்பர்களால் இந்தக் கூண்டு போன்ற இடத்தைத் தாண்டிச் செல்ல முடியாது... இது புதிய உத்தரவு. இது நமது ஜனநாயகத்தின் மோசமான நிலையின் சமீபத்திய படம், என்றார். 

Advertisment


ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா, பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும், போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்று, ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதினார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த நடவடிக்கை எதேச்சதிகாரத்தின் செயல். இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும், என்று கூறினார்.
பின்னர், வணிக ஆலோசனைக் குழு (BAC) கூட்டத்தில், மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், சபையில் ஊடகவியலாளர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கோரினார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் ஆலோசனைகளை வழங்கவும் அனைத்துக் கட்சிக் குழுவை அமைப்பதாக கூட்டத்தில் உள்ள தலைவர்களுக்கு பிர்லா உறுதியளித்தார். 
மேலும், சபாநாயகர் பிர்லாவும் பத்திரிகையாளர் குழுவைச் சந்தித்து, அவர்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சிறந்த வசதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

parliament media

பழைய பார்லிமென்ட் கட்டிடத்திலும், ஊடகங்களுக்கு ஒரு அறை இருந்தது, ஆனால் அது திறந்திருந்தது. முக்கியமாக டிவி கேமராமேன்கள், தலைவர்களின் சவுண்ட்பைட்களைப் பெறுவதற்காக தங்கள் உபகரணங்களுடன் அங்கே அமர்ந்திருப்பார்கள். 
ஊடகவியலாளர்கள் வசதியாக அமர்ந்து குடிநீர், காபி மற்றும் தேநீர் போன்ற வசதிகளைப் பெறுவதற்கு ஏசி வசதியை வழங்குவதற்காக கண்ணாடி அறைக்கு மேம்படுத்தப்பட்டதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாத தொடக்கத்தில், எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா பிர்லா மற்றும் தன்கர் ஆகியோரிடம் முறையே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை மீதான தொற்றுநோய் காலக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தியிருந்தது. 
பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் உள்ள ஆயிரம் ஊடகவியலாளர்கள் இரு அவைகளின் நடவடிக்கைகளையும் உள்ளடக்குவதற்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும், "அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அணுகல் வழங்கப்படுகிறது" என்று கில்ட் கூறியது.
Read in English: Told to clear entry area, media has a new address in Parliament: Glass enclosure
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Parliamanet Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment