ஐ.ஏ.எஸ் தேர்வர்கள் தேடும் இந்த 13 வயது பையன் யார் ?

என்னுடைய குழந்தைகள் பாக்கியசாலிகள் என அமரின் அப்பா பெருமிதம்

13 year old UPSC guru Amar
13 year old UPSC guru Amar

13 year old UPSC guru Amar : ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்கள் அதிகம் தேடும் அமர் இவர் தான். தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மான்சேரியல் என்ற ஊரில் பிறந்தவர் அமர் சாத்விக் தொகிட்டிக்கு தற்போது வயது 13 ஆகும். “லேர்ன் வித் அமர்” என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார் அமர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனலை 1,87,000 நபர்கள் பாலோ செய்து வருகின்றார்கள். 9ம் வகுப்பு படிக்கும் அமரின் தந்தை அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் “சிறு வயதில் இருந்தே அட்லாஸில் விளையாடுவது எனக்கு விருப்பமான ஒன்றாகும்.

அதனை அறிந்து கொண்ட என்னுடைய தந்தை எனக்கு புவியியல் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தார். அப்போது நான் கற்றுக் கொண்டதை பாடமாக எடுக்கும் போது என்னுடைய தாயார் அதனை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் அப்லேட் செய்ய அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் நாங்கள் நிறைய வீடியோக்களை வெளியிடத் தொடங்கினோம்” என்று அமர் கூறினார்.

புவியியல் தொடர்பான பாடங்கள் நடத்தும் போது ஒரு இடத்தின் பெயர், நாட்டின் பெயர், அதன் இருப்பிடம், ஆற்றின் பெயர் ஆகியவற்றை எளிமையாக கண்டறிய வழிவகை சொல்கிறார் அமர். அமரும் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசராக வர வேண்டும் என்று அமர் விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சேனலை பாலோ செய்பவர்களில் நிறைய பேர் ஐ.ஏ.எஸ் படித்துக் கொண்டிருப்பவர்கள். எனக்கு ஒவ்வொரு சப்ஜெட்டினையும் புரிந்து கொண்டு படிக்க குறைந்தது 2 வாரமாவது பிடிக்கும். அதன் பின்னர் ப்ராக்டிஸ் செய்து பின்னர் வீடியோவாக அப்லோட் செய்வோம்.

சில நேரங்களில் நான் எதிர்மறை கருத்துகளையும் பெருவதுண்டு. ஆனாலும் எங்களின் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். வாரக்கடைசியில் மட்டுமே நாங்கள் வீடியோ ஷூட் செய்கின்றோம் என்று அமர் கூறியுள்ளார்.

அமருடைய தந்தை கோவர்தன் ஆச்சாரி தொகிட்டி “என்னுடைய குழந்தைகள் பாக்கியசாலிகள். மற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதையே நானும் சொல்லித் தருகின்றேன். இருப்பினும் இவர்கள் மிகவும் வேகமாக கற்றுக் கொண்டு வருகிறார்கள்” என்று பெருமிதம் அடைந்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Meet 13 year old upsc guru amar he wants to become an ias himself

Next Story
திருப்பதி கோயிலில் தங்க கீரிடங்கள் மாயம்.. சிசிடிவி காட்சிகள் என்ன சொல்கிறது?திருப்பதி கோயில்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express