சௌரவ் ராய் பர்மான் : 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அதே 30ம் தேதி 2019ம் ஆண்டு, முன்னாள் கணக்கு ஆசிரியர், வழக்கறிஞர் மற்றும் ஒரு இளைஞர் இணைந்து 3 தோட்டாக்களை காந்தி உருவ பொம்மை மீது சுட்டனர்.
Advertisment
மீண்டும் நிகழ்த்தப்பட்ட காந்தி கொலை சம்பவம்
அலிகர்ரில் அசைவற்று இருந்த அந்த காந்தியின் உருவ பொம்மையை ஒரு ஆட்டோ ஓட்டுனரும் அருகே இருந்தவர்களும் இணைந்து தீ வைத்து எரித்தனர். அப்போது சுற்றியிருந்தவர்கள் மகிழ்ச்சியாக கூச்சளிட்டும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
அகில இந்திய ஹிந்து மஹாசபாவை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய இந்த சம்பவம் இணையதளம் முழுவதும் வைரலானது. பின்னர் அலிகர் போலீசார் இச்சம்பவத்தை நிகழ்த்திய 6 பேரை கைது செய்தனர், மேலும் 7 பேர் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள 7 பேரில் மஹாசபாவின், தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
காந்தியின் உருவச் சிலை மீது இரண்டாவது தோட்டாவை சுட்ட கஜேந்திர குமார் வர்மா நேற்று இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டு சிறையை விட்டு வெளியேறினார். உடல் நிலையை காரணமாக வைத்து அவருக்கு இந்த ஜாமின் வழங்கப்பட்டது.
“ஏன் காந்தியின் கொள்கைகள் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது? எங்களுக்கு அதை மாற்ற வேண்டும். அதனால் தான் அதே கொலையை மீண்டும் நிகழ்த்த முயற்சித்தோம். நான் மஹாசபாவில் இணைந்ததற்கு காரணமே அவர்களுக்கு இருக்கும் துணிச்சல் தான். நாட்டின் பிளவுக்கு பின்னார் காந்தி தான் இருந்தார் அதை அவர் தான் ஒப்புக் கொண்டார் என்ற உண்மையை துணிச்சலாக கூறுபவர்கள். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு பெரும்பாலும் கிடையாது ஆனால் புரட்சியை உருவாக்க, இது போன்ற அதிதீவிர நிகழ்வுகளை நிகழ்த்துவது அவசியம்” என்று ஜாமினில் விடுவிக்கப்பட்ட வழக்கறிஞர் வர்மா தெரிவித்தார்.
“ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டுவிட்டோம். அந்த காட்சி தத்ரூபமாக இருக்க, ஒரு பலூன் உள்ளே சிவப்பு சாயம் கொண்ட தண்ணீரை ஊற்றி, உருவ பொம்மைக்குள்ளே வைத்தோம். இதனை வெளிக் கொண்டு வர, அனைத்து ஊடகங்களையும் அழைத்தோம். மீடியா தான் அந்த வீடியோவை பரப்பியது” என்றும் கூறினார்.
அலிகர் பகுதியின் ஏ.எஸ்.பி நீரஜ் குமார் ஜடௌன் கூறுகையில், எஃப்.ஐ.ஆர்-ல் 1 பெயர்கள் இஅம்பெற்றுள்ளாது என்றும், அவர்கள் மீது ஐபிசி-க்கு கீழ் 153ஏ, 295ஏ, 147,148,149 மற்றும் பகுதி 6-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அந்த எஃப்.ஐ.ஆர்-ல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த காவலர் ஒருவர் அவர்களை எச்சரித்ததாகவும், அதையும் மீறி அவர்கள் இந்த நிகழ்வை நிகழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இரண்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.
சுற்றுவட்டார தகவலின் அடிப்படையில், போஜா பாண்டே இந்த சபாவை ஆகஸ்டு 2018ம் ஆண்டு துவக்கி இருக்கிறார். நொய்டா பகுதியில் கணக்கு ஆசிரியராக இருந்த போஜா, ஒரு கட்டத்தில், “கோட்சே காந்தியை கொல்லவில்லையென்றால் நானே கொலை செய்திருப்பேன்” என்றார். அதன் பின்னர் அவரின் சர்ச்சை பேச்சுகளால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும், பூஜாவின் கட்டளையிலேயே இதனை செய்ததாக தெரிவித்தனர்.
2017ம் ஆண்டு உபி தேர்தலில், அலிகர் பகுதியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக வென்றது. அப்பகுதியின் பாஜ செயலாளர் விவேக் சரஸ்வடத், “பாண்டே நிகழ்த்தும் சம்பவங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
காவல்துறையை பொருத்தவரை, சமீபக் காலமாக எவ்வித கலவரத்தையும் இப்பகுதி சந்திக்கவில்லை என்றும், ஆனால் ஜனவரி 23 மற்றும் 26 தேதியில் மட்டும் பாஜகவின் யுவ மோர்ச்சா என்ற அமைப்பு அலிகர் இஸ்லாம் பல்கலைகழகம் வரை ஒரு திரங்கா யாத்ராவை மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர்.