Advertisment

மகாராஷ்டிரா இரட்டை சுரங்கப்பாதை திட்டம் : டெண்டருக்கு முன்பே ரூ.140 கோடி தேர்தல் பத்திரங்கள் வாங்கிய மேகா நிறுவனம்

1989-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தனியார் நிறுவனம் தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Mumbai Company

தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ140 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அரசியலல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பா.ஜ.க காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : Megha Engg bought electoral bonds worth Rs 140 crore month before getting Maharashtra project

ஒரு பக்கம் தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், மறுபக்கம், இனி தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. மேலும், தேர்தல் பத்திரங்களை யார் யார் வாங்கியுள்ளார்கள் என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதில் எஸ்.பி.ஐ வங்கி, கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு, எஸ்.பி.ஐ வங்கி தங்களிடம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. தேர்தல் ஆணையம் விரைவில், வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டத்திற்கான டெண்டரை பெறுவதற்கு கடந்த, ஏப்ரல் 11, 2023 அன்று ரூ.140 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்று தகவல் வெளியாகியுள்ளது.

1989-ம் ஆண்டு  நிறுவப்பட்ட இந்த தனியார் நிறுவனம்  தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவரை ரூ. 821 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கத்தின் மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) கடந்த ஆண்டு ஜனவரியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் கீழ் இரண்டு சாலை சுரங்கப்பாதைகளுக்கான திட்டத்திற்கான டெண்டரை வெளியிட்டது. இந்த ஏலத்தில் மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது.

இதனிடையே மும்பையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) பொரிவலி பக்கத்தில் 5.75 கி.மீ சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தின் தொகுப்பு குறித்தும், தனது ஏலத்தில் 2 பேக்கேஜ் 2 (தானே பக்கத்தில் 6.09 கிமீ சுரங்கப்பாதை அமைக்கிறது) ஏலத்தில் இருந்தாலும் தனது அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று கூறி 2 மனுக்களை தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுக்களையும் மே 2023 ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 நிதி ஏலம் திறக்கப்பட்ட பிறகு எல். அண் டி தனது மனுவில் பிழையை சரிசெய்வதற்கான கோரிக்கையை விதிமுறைகளின்படி அனுமதிக்க முடியாது என்று கூறி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ய கோரியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment