வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்குப்பதிவுகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா பக்கம் திரும்பியுள்ளது.
மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அண்மையில் கொல்லப்பட்டார். இதனால், அவரின் தொகுதியை தவிர்த்து மற்ற 59 இடங்களில் கடந்த பிப்ரவரி 18-ம் ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று (3.318) வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி, 28 இடங்களை முன்னிலை மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், மேகாலயாவில் தேசியவாத மக்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.மேகாலயா மற்றும் நாகலாந்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டின.
மேகாலயா மாநிலத்தில் 59 சட்டமன்ற தொகுதிகளில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்,. இங்குள்ள லட்சத்து 29 ஆயிரத்து 333 பெண்கள் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயித்துள்ளனர். வர்களில் 89 ஆயிரத்து 45 பேர் முதன்முறை வாக்காளர்கள் ஆவார்கள்.
தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ‘மாநில வளர்ச்சி’ என்ற யுக்தியை கையில் எடுத்து தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தனர். மேகாலயாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.