மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே விவசாயிகளை அவமானப்படுத்த முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆளுநரின் பேச்சால், கட்சியில் மூத்த தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டாலும், யாரும் கருத்துச் சொல்ல முன்வரவில்லை. சமூக ஆர்வலராக விவசாயிகள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ள ஆளுநர் மாலிக் எதிராக கருத்து தெரிவிப்பது நல்லது இல்ல என கருதி, நேற்று தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் சந்திப்பில் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.
ஐஐடி டெல்லி இயக்குநர் ரேசில் ஜேஎன்யு துணைவேந்தர் முன்னிலை
ஐஐடி டெல்லி, இந்தூர் மற்றும் மண்டி ஆகியவற்றுக்கான புதிய இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், புதிதாக ஐஐடி பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், கோவா மற்றும் ஜம்மு ஆகியவற்றுக்கான இயக்குநர்களின் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி டெல்லிக்கான இயக்குநரை தேர்ந்தெடுக்கும் பட்டியலில் முதலில் ஜேஎன்யு துணைவேந்தரும் பேராசிரியரும் எம் ஜெகதீஷ் குமார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவிக்கு கிடைக்கவிருந்த ஐஐடி இந்தூர் இயக்குநர் பதவியை வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.கடந்த மாதம், தேர்வுக் குழு கூட்டத்திற்கு முன்பு ஐஐடி இந்தூரின் இயக்குநர் பதவி விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை கேட்கும் மத்திய அரசு
அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க இந்திய அதிகாரிகள், இம்மாதம் இறுதியில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பானது வணிகம் மட்டுமின்றி அரசியலுக்கும் முக்கியத்தவம் வாய்ந்தது ஆகும்.
எனவே, இச்சந்திப்பின் போது இந்தியா தரப்பில் வைக்கவேண்டிய பிரச்சினைகள் குறித்து உங்களுடைய பரிந்துரைகளைக் கூறலாம் என பொது மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமை குறித்த விவகாரம் தொழில் நிறுவனங்கள் முழுவதும் விரிவடைந்து நடைபெறுகிறதா அல்லது அங்குமிங்குமாய் ஒரு சில இடத்தில் மட்டும் நடைபெறுகிறதா என்பது குறித்த ஆலோசனை வழங்கும் வகையில் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசாங்கம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிட அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil