Advertisment

மேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்பு பணி: தொழிலாளர்களை மீட்க கைகோர்க்கும் இந்திய விமானப் படை!

15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்பு  பணி: தொழிலாளர்களை மீட்க  கைகோர்க்கும் இந்திய விமானப் படை!

மேகாலயா சுரங்க தொழிலாளர்கள்

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.இந்த மீட்புப் பணியில் தற்போது இந்திய விமானப்படை மற்றும் கடற்படை கைக்கோர்த்துள்ளனர்.

Advertisment

மேகாலயா சுரங்க தொழிலாளர்கள்:

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சென்றனர். சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் இருப்பதாக உள்ளே சென்ற தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இவர்களை மீட்கும் பணி தற்போது மும்முரமாக  நடந்து வருகிறது. 70-க்கும் அதிகமான தேசிய பேரிடர் மீட்பு படையினர் 370 அடி ஆழம் கொண்ட சுரங்கத்திற்குள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று நீச்சல் வீரர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் புவனேஸ்வரத்தில் இருந்து 10 அதிக செயல் திறன் கொண்ட பம்புகள் கொண்டு வரப்பட்டு சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேகாலயா சுரங்க தொழிலாளர்கள்

கடற்படையின் செயல் திறன் மிக்க 15 நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை தளபதி எஸ்.கே. சிங் கூறுகையில், ''அடுத்த சில மணி நேரங்களுக்கு எங்களால் எந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அவற்றை செய்து வருகிறோம். பம்புகள் மூலம் நீரின் அளவை குறைக்க முயற்சி நடந்து வருகிறது.'' என்றார்.

சுரங்க தொழிலாளர்களை உயிருடன்  மீட்க 2 வாரத்திற்கும் மேலாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.  முதலில் குறைந்த அழுத்தம் கொண்ட பம்புகளை வைத்து நீரை வெளியேற்ற முயன்றனர். இதில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து பக்கத்து மாநிலங்களில் இருந்து அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேகாலயா சுரங்க தொழிலாளர்கள்

இந்நிலையில் விசாகப்பட்டினத்திலிருந்து 15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர். ஒடிசாவில் இருந்து சிறந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் எனப் பலரும் தற்போது இந்த மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.

Indian Army Meghalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment