போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் பிரதமருக்கு முக்கியமா? ராகுல் காந்தி கேள்வி

சுரங்கங்களில் சிக்கியவர்களை காப்பாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை என உறவினர்கள் கவலை

Meghalaya Miners : மேகலாயா மாநிலத்தில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக, நிலக்கரி சுரங்களில் மாட்டிக் கொண்டு வெளிவர இயலாமல் 15 தொழிலாளிகள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பதிலும் அவர்களை மீட்பதிலும் அதிக தொய்வு ஏற்பட்டுள்ளது.

Meghalaya Miners : காப்பற்றக் கோரி ராகுலின் அழைப்பு

ஆனால் இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நரேந்திர மோடி கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.  இந்தியாவின் மிக நீளமான ரயில்வே மேம்பாலமான போகிபீல் மேம்பாலத்தினை திறந்து வைப்பதற்காக நேற்று அசாம் சென்றார் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேகலயாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஜெயிந்தியா மலைப் பகுதிகளில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்திற்குள் திடீரென தண்ணீர் புகுந்துவிட்டது. 13 நாட்களாக அந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்டு சிரமப்பட்டு வருகின்றார்கள் சுரங்க தொழிலாளிகள்.

Meghalaya Miners உயிர் திரும்பமாட்டார்கள் என உறவினர்கள் வருத்தம்

கடந்த பத்து நாட்களாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மூன்று தொழிலாளிகளின் ஹெல்மெட்டைத் தவிர அவர்களால் வேறெதையும் மீட்க முடியவில்லை.

சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களின் உறவினர்கள் “அவர்கள் நிச்சயம் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் இறந்துவிட்டதாக நாங்கள் நினைத்துக் கொள்கின்றோம். இந்த அரசு அவர்களை உயிருடன் மீட்பது குறித்து பெரிதும் அக்கறை காட்டவில்லை” என்று கூறுகின்றார்கள்.

மேலும் படிக்க : தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட மாணவர்கள்… காப்பாற்றிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உயரிய கௌரவம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close