திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 18 நடந்து முடிந்தன. இதில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி தற்போது துவங்கியுள்ளது.
(குறிப்பு :
நாகலாந்து NDPP – தேசிய ஜனநாயக முன்னணி கட்சி, NPF – நாகா மக்கள் முன்னணி, OTH – மற்றவர்கள், INC – இந்திய தேசிய காங்கிரஸ், BJP – பாரதிய ஜனதா கட்சி
மேகாலயா : INC – காங்கிரஸ், NPP -தேசிய மக்கள் கட்சி, OTH – மற்றவர்கள், BJP – பாரதிய ஜனதா, UDP – ஐக்கிய ஜனநாயக கட்சி
திரிபுரா : BJP – பாரதிய ஜனதா, LEFT Front – இடது முன்னணி, OTH – மற்றவர்கள், INC – காங்கிரஸ், TMC – திரிணாமுல் காங்கிரஸ்)
மேகாலயா தேர்தல் : காங்கிரஸ் 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் வெற்றி. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், தொங்கு சட்டமன்றம் அமைகிறது.
காலை 9.10:
மேகாலயா: [ 36/59 ] காங்கிரஸ் – 11, என்பிஎஃப் -11, மற்றவை – 14
திரிபுரா: [52/59] பாஜக -25 மார்க்சிஸ்ட் – 24 மற்றவை -2
நாகலாந்து : [14/60] என்பிஎஃப் -5 பாஜக -9 காங்கிரஸ் -0
காலை 8.50:
மேகாலயா: [ 27/59 ] காங்கிரஸ் – 8, பாஜக -0, என்பிஎஃப் -7, மற்றவை – 7
திரிபுரா: [42/59] பாஜக -18 மார்க்சிஸ்ட் – 24 காங்கிரஸ் -1
நாகலாந்து : [8/60] என்பிஎஃப் -0 பாஜக -8 காங்கிரஸ் -0
காலை 8.30:
மேகாலயா: [ 2/59 ] காங்கிரஸ் – 2, பாஜக -0, மார்க்சிஸ்ட் -0
திரிபுரா: [11/59] பாஜக -5 மார்க்சிஸ்ட் – 5 காங்கிரஸ் -1
நாகலாந்து : [1/60] என்பிஎஃப் -0 பாஜக -1 காங்கிரஸ் -0
காலை 8.00: திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
காலை 7.50 : வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அதிகாரிகள் வர தொடங்கின.
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்தில் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. திரிபுராவில் கடந்த 18ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. நாகலாந்து, மேகாலயாவில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. நாளை மறுதினம் (மார்ச் 3) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
இந்தநிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. தலா 60 தொகுதிகளை கொண்ட இம்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால், இம்மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதேபோல், மற்றொரு கருத்துக் கணிப்பில் பாஜக 45 முதல் 50 இடங்களை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.